2020 புத்தாண்டு (நான்காம் பாகம்) ராசி பலன்கள் Rasi Palangal - Midhuna Rasi (மிதுன ராசி)

நவம்பர் 20, 2020 முதல் டிசம்பர் 31, 2020 வரை எதிர்பாராத பின்னடைவு (30 / 100)


குரு உங்கள் ராசியின் 8ஆம் வீடான அஷ்டம ஸ்தானத்திற்கு நவம்பர் 20, 2020 அன்று பெயருவார். உங்களுக்கு ஏற்கனவே அஷ்டம சனி நடப்பதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும். செவ்வாய் உங்கள் ராசியின் 1௦ஆம் வீட்டிற்கு பெயருவது சிறப்பாக இல்லை. அனைத்து எதிர்மறை சக்திகளையும் ஒரே இரவில் இந்த பாகத்தில் நீங்கள் உணருவீர்கள. உங்களுக்கு உங்கள் வாழ்க்கையின் பல பரிணாமங்களில் இருந்தும் பிரச்சனைகள் வரக் கூடும்.
உங்கள் மருத்துவ செலவுகள் அதிகர்க்கக் கூடும். உங்கள மனைவி/கணவன், குழந்தைகள் மற்றும் குடும்பத்தினர்களுடன் உங்களுக்கு கருத்து வேறுபாடு உண்டாகக் கூடும். குடும்பத்தில் அரசியல் அதிகரித்து உங்கள் மன நிம்மதி பாதிக்கக் கூடும். உங்கள் அலுவலக வாழ்க்கை, அலுவலகத்தில் ஏற்படும் மாற்றங்களால் பெரிதும் பாதிக்கக் கூடும். உங்கள் முதலாளி உங்களை அதிகம் கண்காணிப்பார். அலுவலகத்தில் உங்களுக்கு எதிராக நடக்கும் சதி மற்றும் அரசியலால் உங்களுக்கான முக்கியத்துவத்தை நீங்கள் இழப்பீர்கள். தொழிலதிபர்கள் உங்கள் தொழிலை விற்று விட்டோ அல்லது அதனை வேறு ஒருவரின் பெயருக்கு மாற்றியோ பாதுகாப்பாக வெளியேற வேண்டும்.


உங்கள் நிதி நிலை குறித்த விடயங்களுக்கு இது ஒரு சவால் நிறைந்த காலகட்டமாக இருக்கும். அதிகரிக்கும் நிதி தேவைகள் உங்கள் சேமிப்பை பாதிக்கக் கூடும். நீங்கள் கவனமாக இல்லையென்றால், பண விடயங்களில் நீங்கள் ஏமாற்றப் படலாம். எந்த விதமான பங்கு சந்தை முதலீடுகளை தவிர்ப்பது நல்லது. அப்படி நீங்கள் செய்தால், உங்கள் முதலீடுகள் பெரிய அளவு நட்டத்தையும், இறக்கத்தையும் சந்திக்கும் சூழல் உண்டாகும். உங்கள் மனோ பலத்தை அதிகரித்து இந்த சோதனை காலத்தை நீங்கள் கடக்க முயற்சி செய்ய வேண்டும்.




Prev Topic

Next Topic