![]() | 2020 புத்தாண்டு உடல் நலம் ராசி பலன்கள் Rasi Palangal - Midhuna Rasi (மிதுன ராசி) |
மிதுன ராசி | உடல் நலம் |
உடல் நலம்
சனி பகவான் உங்கள் ராசியின் 8ஆம் வீட்டில் ஜனவரி 23, 2020 முதல் சஞ்சரிப்பார். குரு பின்னோக்கி பெயர்ந்து 8ஆம் வீட்டிற்கும், பின் 7ஆம் வீட்டிற்கும் பெயருவார். உங்கள் உடல் நலம் குறிப்பாக ஏப்ரல் 2020 முதல் ஜூன் 2020 வரையிலான காலகட்டத்தில் பாதிக்கக் கூடும். இந்த ஆண்டின் மற்ற மாதங்களில் நல்ல உடல் நலம் நீடிக்கும்.
சனி பகவான் உங்கள் ராசியின் 8ஆம் வீட்டில் சஞ்சரித்து அதிக பதற்றத்தையும், மன அழுத்தத்தையும் தரக் கூடும். எனினும், உங்கள் உடல் நலம் இந்த ஆண்டு அஷ்டம சனியால் பெரிதும் பாதிக்கப்படாது. குரு நல்ல நிலையில் சஞ்சரிப்பதால். உங்களால் உங்கள் பிரச்சனையின் மூல காரணத்தை கண்டரிந்து, தக்க மருந்து கிடைத்து, விரைவாக குணமடைவீர்கள்.
மருத்துவ காப்பீடு மூலம் உங்கள் மருத்துவ செலவுகளை முற்றிலும் பார்த்துக் கொள்வீர்கள். உங்கள் மனைவி/கணவனின் உடல் நலத்தில் முன்னேற்றம் ஏற்படும். எனினும், ஏப்ரல் 2020 முதல் ஜூன் 2020 வரை, மீண்டும் நவம்பர் 2020க்கு மேல் உள்ள காலகட்டத்தில் உங்கள் பெற்றோர்களின் உடல் நலத்தின் மீது அதிக கவனம் தேவை. சரியான உணவு முறை, மற்றும் உடற் பயிற்சி செய்வதால், உங்கள் உடல் எடை ஆரோக்கியமான அளவில் இருக்கும். தினமும் காலையில் ஆதித்ய ஹ்ருதயம் மற்றும் ஹனுமான் சலிச கேட்பதால் அதிக பலம் பெறுவீர்கள். சுதர்சன மகா மந்திரமும் கேட்கலாம்.
Prev Topic
Next Topic