![]() | 2020 புத்தாண்டு காதல் ராசி பலன்கள் Rasi Palangal - Midhuna Rasi (மிதுன ராசி) |
மிதுன ராசி | காதல் |
காதல்
இந்த 2020ஆம் ஆண்டு உங்களுக்கு கலவையான பலனைத் தரக் கூடும். உங்களுக்கு பொற்காலமும் இருக்கும், வலி மிகுந்த காலமும் இருக்கும். நீங்கள் யாரையாவது விரும்புகின்றீர்கள் என்றால், உங்களுக்கு அவருடன் திருமணம் நடக்கும். உங்கள் பெற்றோர்கள் உங்கள் காதல் திருமணத்திற்கு ஒப்புதல் தருவார்கள். எனினும், அவர்கள் உங்களுக்காக மட்டுமே இந்த திருமணத்திற்கு சம்மதம் தெரிவிப்பார்கள். உங்கள் வாழ்க்கையில் நல்ல விடயங்கள் நடந்தாலும், சில மன உளைச்சல்களும் ஏற்படக் கூடும்.
உங்கள் மனைவி /கணவன் உங்கள் எதிர்பார்புகளை சரியாக புரிந்து கொள்வார்கள். மேலும் உங்கள் தேவைகளையும் பூர்த்தி செய்ய முயற்சி செய்வார்கள். திருமணம் ஆன தம்பதியினர் நல்ல அன்யுனியதோடு இருப்பார்கள். நீண்ட காலமாக குழந்தை பேருக்காக காத்திருந்த தம்பதியினர் அதற்கான பாக்கியத்தை தற்போது பெறுவார்கள். மேலும் இயற்கையாகவே உங்களுக்கு குழந்தை பெரும் பாக்கியம் உண்டாகும். உங்கள் ராசியின் 8ஆம் வீடு பாதிக்கப்படுவதால், நீங்கள் IVF அல்லது IUI போன்ற மருத்துவ சிகிச்சையை செய்ய எண்ணினால், அதற்கு உங்கள் பிறந்த சாதகத்தின் பலன் இருக்க வேண்டும்.
உங்களுக்கு திருமணம் ஆகாமல் இருந்தால், தற்போது, ஒரு நல்ல வரனை கண்டறிந்து, திருமணம் செய்து கொள்ள ஏற்ற நேரமாக உள்ளது. மார்ச் 15, 2020க்கு முன்னர் அல்லது ஆகஸ்ட் 1, 2020 முதல் அக்டோபர் 3௦, 2020க்குள் இருக்கும் காலகட்டத்தில் திருமணம் செய்து கொள்வது நல்லது. ஏனென்றால், ஏப்ரல், மே, மற்றும் ஜூன் 2020 ஆகிய மாதங்களில் உங்களுக்கு குறிப்பிடத்தக்க பின்னடைவுகள் ஏற்படக் கூடும். இந்த பாகம் ஒரு குறுகிய காலகட்டம் என்றாலும், இதன் தாக்கம் அதிகமாக இருக்கக் கூடும்.
Prev Topic
Next Topic