2020 புத்தாண்டு ராசி பலன்கள் Rasi Palangal - Midhuna Rasi (மிதுன ராசி)

கண்ணோட்டம்


முக்கிய கிரகங்கள் உங்கள் ராசியின் 7ஆம் வீட்டில் சஞ்சரிக்க, இந்த ஆண்டு உங்களுக்கு ஒரு நல்ல தொடக்கத்தோடு தொடங்குகிறது. குருவின் பலத்தால் நீங்கள் அதிகம் நேர்மறை சக்திகளை பெறுவீர்கள். உங்கள் உத்தியோகம் மற்றும் குடும்ப சூழலில் நல்ல மாற்றங்கள் நிலவும். இந்த ஆண்டின் தொடக்கத்தில் உங்கள் நிதி நிலையில் பெரிய அளவு நல்ல முன்னேற்றம் ஏறபடும்.
எனினும் சனி பகவான் உங்கள் ராசியி 8ஆம் வீட்டிற்கு ஜனவரி 23, 2020 அன்று பெயருகிறார். மேலும் குரு, சனி பகவான் மற்றும் செவ்வாய் 8ஆம் வீடான மகர ராசியில், ஏப்ரல், மே மற்றும் ஜூன் 2020 மாதங்களில் இணைந்து சஞ்சரிப்பார்கள். ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரையிலான காலகட்டம் உங்களுக்கு ஒரு கடுமையான சோதனை காலமாக இருக்கும்.


ராகு உங்கள் ராசியின் 12ஆம் வீட்டிலும், கேது 6ஆம் வீட்டிலும் சஞ்சரித்து உங்களுக்கு செப்டம்பர் 2020 முதல் உதவி செய்வார்கள். ஜூலை மாதம் முதல் அக்டோபர் 2020 வரை நீங்கள் சிறப்பான வளர்ச்சியையும், பல நல்ல பலன்களையும் பெறுவீர்கள். மீண்டும் நவம்பர் மற்றும் டிசம்பர் 2020 ஆகிய இரண்டு மாதங்கள் நீங்கள் சோதனை காலத்தை சந்திப்பீர்கள்.
மொத்தத்தில் இந்த ஆண்டு உங்களுக்கு ஒரு ரோலர் கோஸ்டர் பயணம் போல மேலும், கீழுமாக இருக்கும். நீங்கள் நீங்கள் வெற்றி பெற வேண்டும் என்றால், உங்கள் பலம் மற்றும் பலவீனம், ஆகிய இரண்டையும் புரிந்து கொள்ள வேண்டும். இந்த ஆண்டு உங்களுக்கு அதிர்ஷ்டம் உண்டாகும். ஆனால் அந்த அதிர்ஷ்டம் ஒரு குறிகிய காலத்திற்கு மட்டுமே இருக்கும். சாதூர்யமாக செயல்பட்டு, உங்களுக்கு கிடைக்கும் வாய்ப்பை நீங்கள் நன்றாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.




Prev Topic

Next Topic