2020 புத்தாண்டு திரைத்துறை, கலைத்துறை, விளையாட்டு துறை மற்றும் அரசியலில் இருப்பவர்கள் ராசி பலன்கள் Rasi Palangal - Midhuna Rasi (மிதுன ராசி)

திரைத்துறை, கலைத்துறை, விளையாட்டு துறை மற்றும் அரசியலில் இருப்பவர்கள்


திரை நட்சத்திரங்கள், தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், மற்றும் விநியோகத்தர்கள் குரு ஜென்ம ராசியின் 7ஆம் வீட்டில் இருந்து பார்வை இடுவதால் நல்ல நேரத்தை பெறுவார்கள். மறைமுக எதிரிகளால் எந்த பிரச்சனையும் இருக்காது. உங்களுக்கு உங்கள் திறமையை நிரூபிக்க நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். உங்கள் கடின உளைபிர்க்கான அங்கிகாரமும், அதற்கான சன்மானங்களும் உங்களுக்கு கிடைக்கும். அதிகரிக்கும் புகழ் மற்றும் செல்வாக்கால் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். நிதி சன்மானங்கள் மற்றும் வருமானங்கள் சிறப்பாக இருக்கும்.
சனி கனவான் ஜனவரி 2020 முதல் சிறப்பான நிலையில் சஞ்சரிக்காததால், நீங்கள் நீண்ட கால அடிப்படையிலான ப்ரோஜெக்ட்டுகளை தவிர்த்து விடுவது நல்லது. குறுகிய கால ப்ரோஜெக்ட்டுகள் உங்களுக்கு விரைவான வெற்றியையும் நல்ல முன்னேற்றத்தையும் தரும். குரு நல்ல நிலையில் சஞ்சரித்தாலும், பட தயாரிப்பாளர்கள் மற்றும் விநியோகத்தர்கள் அதிக கவனத்தோடு இருக்க வேண்டும். ஏனென்றால் சனி பகவானின் தாக்கம் உங்கள் உத்தியோகத்தில் / தொழிலில் இருக்கக் கூடும். உங்களுக்கு குறிப்பாக ஏப்ரல், மே, ஜூன் மற்றும் நவம்பர் 2020 ஆகிய மாதங்களில் அதிக சவால்கள் நிறைந்த நேரமாக இருக்கும்.




Prev Topic

Next Topic