![]() | 2020 புத்தாண்டு (இரண்டாம் பாகம்) ராசி பலன்கள் Rasi Palangal - Midhuna Rasi (மிதுன ராசி) |
மிதுன ராசி | இரண்டாம் பாகம் |
மார்ச் 29, 2020 முதல் ஜூலை 01, 2020 வலிமிகுந்த சம்பவங்கள் (30 / 100)
குரு உங்கள் ராசியின் 8ஆம் வீட்டிற்கு அதி சரமாய் பெயர்ந்து, சனி பகவான் மற்றும் செவ்வாயோடு இணைந்து சஞ்சரிப்பார். உங்கள் ராசியின் 8ஆம் வீடு மோசமாக பாதிக்கப்படுவதால், இந்த குரு பெயர்ச்சி காலத்தின் ஒரு மோசமான காலகட்டமாக இது இருக்கும். மேலும் உங்களுக்கு மன அழுத்தம் மற்றும் பதற்றம் அதிகமாக இருக்கும். உங்கள் நெருங்கிய உறவினர்களுடன் உங்களுக்கு பிரச்சனைகள் உண்டாகும். இதனால் நீங்கள் மன நிம்மதி இல்லாமல் இருப்பீர்கள். காதலர்கள் மற்றும் திருமணம் ஆன தம்பதியினர் தற்போது சவால் நிறைந்த நேரத்தை சந்திப்பார்கள். உங்கள் மகா தசை பலவீனமாக இருந்தால், நீங்கள் வேலை மற்றும் பயணம் காரணமாக தற்காலிகமாக பிரியக் கூடும்.
அலுவகலத்தில் உங்களுக்கு எதிராக அதிக அரசியலும், சதிகளும் இருக்கும். உங்களுடன் வேலைப் பார்ப்பவர்களுடன் கடுமையான வாக்குவாதங்கள் ஏற்படக் கூடும். எனினும், உங்கள் முதலாளி உங்களுக்கு உறுதுணையாக இருக்க மாட்டார். மேலும் எச் ஆர் உங்களுக்கு செயல் திறன் குறைவது காரணமாக நோட்டிஸ் தரக் கூடும். இந்த காலகட்டத்தில் நீங்கள் வளர்ச்சியை எதிர் பார்க்க முடியாது, எனினும், இந்த சோதனை காலம் குறுகிய காலத்திற்கு மட்டுமே. நீங்கள் பொறுமையாக இருந்தால், ஜூலை 2020 முதல் நலல் மாற்றத்தை காண்பீர்கள், தொழிலதிபர்கள் அதிக சவால்களை இந்த பாகத்தில் சந்திப்பார்கள்.
எதிர்பாராத பயணம் மற்றும் மருத்துவ செலவுகளால், செலவுகள் அதிகரிக்கக் கூடும். மேலும் நீங்கள் உங்கள் நண்பர்கள், குடும்பத்தினர்கள் அல்லது உறவினர்களால் பண விடயத்தில் ஏமாற்றப் படலாம். நீங்கள் ஒரு தொண்டு நிறுவனத்திற்கு பணம் தானம் செய்தாலும், அது சரியான நபரை சென்றடையாமல் போகலாம். பங்கு சந்தை முதலீடுகள் அதிக இழப்பை உண்டாக்கக் கூடும். ரியல் எஸ்டேட் முதலீடுகளை உங்கள் பிறந்த சாதக பலன் இல்லாமல் செய்வதை தவிர்ப்பது நல்லது.
Prev Topic
Next Topic