![]() | 2020 புத்தாண்டு (மூன்றாம் பாகம்) ராசி பலன்கள் Rasi Palangal - Midhuna Rasi (மிதுன ராசி) |
மிதுன ராசி | மூன்றாம் பாகம் |
ஜூலை 01, 2020 முதல் நவம்பர் 20, 2020 வரை நல்ல அத்ரிஷ்டம் (80 / 100)
குரு பகவான் மீண்டும் உங்கள் ராசியின் 7ஆம் வீடான களத்திற ஸ்தானத்திற்கு பெயருவார். இதனால் உங்களுக்கு நல்ல நிவாரணம் கிடைக்கும். உங்களுக்கு கடந்த நாட்களில் ஏற்பட்ட பின்னடைவுகளில் இருந்து வெளி வருவீர்கள். விடயங்கள் இந்த காலகட்டத்தில் நல்ல முன்னேற்றம் பெரும். குரு செப்டம்பர் 13, 2020 அன்று வக்கிர நிவர்தி அடைகிறார். ராகு / கேது பெயர்ச்சி செப்டம்பர் மாதம் நடைபெறுகிறது. இது உங்களுக்கு நல்ல பலனைத் தரக்கூடியதாக இருகின்றது. இந்த காலகத்த்த்தில் உங்கள் வாழ்க்கையில் நீங்கள் சிறப்பான வளர்ச்சியை எதிர் பார்க்கலாம்.
எந்த உடல் உபாதைகளும் இருக்காது. உங்கள் உடல் நலம் நல்ல ஆரோக்கியத்தோடு இருக்கும். நீங்கள் நல்ல ஈர்ப்பு சக்தியை பெறுவீர்கள். நீங்கள் காதலில் விழலாம் அல்லது உங்களுக்கு திருமணம் நிச்சயிக்கப் படலாம். திருமணம் ஆன தம்பதியினர் நல்ல அன்யுனியதோடு இந்த காலகட்டத்தில் இருப்பார்கள். மேலும் நீண்ட காலமாக குழந்தை பேருக்காக காத்திருந்த தம்பதியினர் அதற்கான பாக்கியத்தை பெறுவார்கள். சுப காரியங்கள் நிகழ்த்துவதில் மகிழ்ச்சி அடைவீர்கள்.
அடுத்த நிலைக்கு உங்களுக்கு பதவி உயர்வு கிடைத்தால், அதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை. பங்கு சந்தையில் உங்களுக்கு நல்ல சன்மானங்கள், பானஸ் மற்றும் நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படுவதால் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். ஒரு பெரிய நிறுவனத்தில் உங்களுக்கு வேலை வாய்ப்பு கிடைத்து, அதனை ஏற்றுக் கொண்டு வேலையில் சேர இது நல்ல நேரம். உங்கள் அலுவலக வாழ்க்கையை எளிதாக சமாளிப்பீர்கள். தொழிலதிபர்கள் தங்கள் லாபத்தை பணமாக்க இது நல்ல நேரம். உங்கள் நிதி பிரச்சனைகளில் இருந்து வெளி வருவீர்கள். இந்த காலகட்டத்தை பயன்படுத்தி உங்கள் வாழ்க்கையில் செட்டில் ஆகி விட முயற்சி செய்யுங்கள்.
Prev Topic
Next Topic