2020 புத்தாண்டு ராசி பலன்கள் Rasi Palangal - KT ஜோதிடர்

கண்ணோட்டம்


இந்த ஆண்டு தனுசு ராசியில் சனி, குரு, சூரியன், புதன் மற்றும் கேது கிரகங்கன் ஒன்றாக இணைந்து சஞ்சரித்து தொடங்குகிறது. இந்த ஆண்டு குரு பகவானின் அதிபதியான பூரட்டாதி நக்ஷத்திரத்தில் தொடங்குகிறது. இந்த கிரக அம்சம் தீய சக்திகளை பலவீனப்படுத்தும். இது அனைவர்க்கும் மகிழ்ச்சியான செய்தி. ஊழல் செய்யும் அதிகாரிகள் இந்த ஆண்டில் குரு பகவானால் தண்டிக்கப்படுவார்கள். பொதுவான நடுத்தர வர்க்க மக்களுக்கு நீதி கிடைக்கும்.

ஜனவரி 23, 2020 அன்று சனி பகவான் தனுஷ் ராசியிலிருந்து மகர ராசிக்கு இடப்பெயர்ச்சி ஆகின்றார். ராகு மிதுனா ராசியிலும் மற்றும் கேது தனுஷு ராசியிலும் செப்டம்பர் 25, 2020 வரை இருப்பார், பின்னர் முறையே ரிஷப ராசி மற்றும் விருச்சிக ராசிக்கு பின்னோக்கி செல்வார்கள்.

சிறப்பு குறிப்பு: குரு பகவான் மார்ச் 30, 2020 முதல் 90 நாட்களுக்கு மகர (Makara Rasi) ராசியில் அதி சாரமாக சஞ்சரிக்கிறார். குரு பகவான் வக்கிரம் அடைந்து மீண்டும் ஜூன் 30, 2020 -ம் தேதி தனுசு ராசியை வந்தடைகிறார். குரு பகவான் நவம்பர் 20, 2020-ல் மகர ராசிக்கு இடப்பெயர்ச்சி ஆகின்றார்.

இந்த குரு பெயர்ச்சி கல கட்டத்தில் இருக்கும் முக்கியமான கிரக அம்சங்கள்:

1. குரு, சனி மற்றும் கேது ஆகிய மூன்று கிரகங்கள் தனுஷு ராசியில் ஜனவரி 01, 2020 முதல் ஜனவரி 23, 2020 வரை இணைந்து சஞ்சரிப்பார்கள்.
2. குரு, செவ்வாய் மற்றும் கேது ஆகிய மூன்று கிரகங்கள் தனுஷு ராசியில் பெப்ரவரி 08, 2020 முதல் மார்ச் 22, 2020 வரை இணைந்து சஞ்சரிப்பார்கள்.
3. குரு, சனி மற்றும் செவ்வாய் ஆகிய மூன்று கிரகங்கள் மகர ராசியில் மார்ச் 30, 2020 முதல் மே 05, 2020 வரை இணைந்து சஞ்சரிப்பார்கள். குரு பகவான் மகர ராசியில் அதி சாரமாக 90 நாட்களுக்கு மார்ச் 30, 2020 வரை சஞ்சரிப்பார்.
4. சுக்கிர பகவான் மே 13, 2020 முதல் ஜூன் 25, 2020 வரை வக்கிரம் பெற்று சஞ்சரிப்பார்.
5. செவ்வாய் செப்டம்பர் 9, 2020 முதல் நவம்பர் 14, 2020 வரை வக்கிரம் பெற்று சஞ்சரிப்பார். அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் நவம்பர் 3, 2020 அன்று நடைபெறுவது குறிப்பிடதக்கது.

கிரகங்கள் தங்களது சேர்க்கை மற்றும் வக்கிரம் என்று குறுகிய கல கட்டத்தில் மாறி மாறி சஞ்சரிப்பதால், மக்களின் அதிர்ஷ்டங்கள் இந்த ஆண்டு கால கட்டத்திற்கு அடிக்கடி மாறுபடும்.

Prev Topic

Next Topic





Disclaimer: This web site is for educational and informational purposes only.

Content copyright 2010-2023. Betelgeuse LLC. All rights reserved.