2020 புத்தாண்டு கல்வி ராசி பலன்கள் Rasi Palangal - Simma Rasi (சிம்ம ராசி)

கல்வி


மாணவர்கள் இந்த 2020ஆம் ஆண்டு சிறப்பான நேரத்தை காண்பார்கள். கடந்த நாட்களில் நீங்கள் செய்த தவறுகளை உணர்ந்து தற்போது சரியான பாதையில் செல்ல முயற்சி செய்வீர்கள்,. தவறான நண்பர்கள் வட்டாரத்தில் இருந்து முற்றிலும் வெளி வந்து விடுவீர்கள். படிப்பில் அதிகம் ஆர்வத்தை பெறுவீர்கள். மேலும் விளையாட்டிலும் சிறப்பாக செயல்படுவீர்கள்.
இந்த ஆண்டு பரிச்சையை சிறப்பான எழுதி நல்ல மதிப்பென்களைப் பெறுவீர்கள். உங்களுக்கு எளிதாக நல்ல கல்லூரி அல்லது பல்கலைகழகத்தில் சேர்க்கை கிடைக்கும். உங்களுக்கு புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். அவர்கள் உங்கள் வளர்ச்சிக்கும், வெற்றிக்கும் உறுதுணையாக இருப்பார்கள். உங்கள் நண்பர்களுடன் நல்ல நெருங்கிய நட்போடு இருப்பதால், ஜனவரி 2020 முதல் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். முதுநிலை பட்டம் மற்றும் PhD மாணவர்கள் இந்த 2020ஆம் ஆண்டின் இறுதியில் தங்கள் ஆய்வறிக்கையை முடித்து ஒப்புதல் பெற்று, பட்ட படிப்பையும் முடிப்பார்கள்.




Prev Topic

Next Topic