![]() | 2020 புத்தாண்டு குடும்பம் மற்றும் உறவுகள் ராசி பலன்கள் Rasi Palangal - Simma Rasi (சிம்ம ராசி) |
சிம்ம ராசி | குடும்பம் மற்றும் உறவுகள் |
குடும்பம் மற்றும் உறவுகள்
இந்த 2020 புத்தாண்டு முதல் நீங்கள் நல்ல நிவாரணத்தைப் பெறத் தொடங்குவீர்கள். நீங்கள் வலி மிகுந்த பல அனுபவங்களை அக்டோபர் 2019 வரை பெற்றிருப்பீர்கள். உங்களுக்கு உங்கள் வாழ்க்கையில் ஒரு நல்ல திருப்புமுனை இப்போது நடக்க உள்ளது. பெப்ரவரி மாதத்தை நீங்கள் அடைந்ததும், உங்கள் சோதனை காலத்தில் இருந்து முற்றிலும் வெளி வந்து விடுவீர்கள். சனி பகவான் உங்கள் ரூன ரோக சத்ரு ஸ்தானத்திலும், குரு உங்கள் பூர்வ புண்ய ஸ்தானத்திலும் சஞ்சரித்து உங்கள் குடும்பத்தில் நடக்கும் பிரச்சனைகளுக்கு நிரந்தரமாக தீர்வைப் பெற உதவுவார்கள்.
இந்த 2020ஆம் ஆண்டு திருமணம் ஆன தம்பதியினரின் உறவு நல்ல முன்னேற்றத்தைப் பெரும். உங்களுக்கு உங்கள் நண்பர்கள், குடும்பத்தினர்கள் மற்றும் உறவினர்களிடம் இருந்து வரும் நாட்களில் நல்ல உதவி கிடைக்கும். அவர்கள் உங்களுக்கு அனைத்து விடயத்திலும் உறுதுணையாக இருப்பார்கள். உங்கள் மகன் மற்றும் மகளுக்கு திருமணம் பேசி நிச்சயிக்க இது நல்ல நேரம், சுப காரியங்கள் நடத்துவதில் நீங்கள் மகிழ்ச்சி அடைவீர்கள். உங்கள் குடும்பம் பெப்ரவரி 2020 முதல் நவம்பர் 2020 வரையிலான காலகட்டத்தில் நல்ல மதிப்பை சமுதாயத்தில் பெரும். உங்களை இது மதிக்காமல் இருந்த உங்கள் உறவினர்கள், தற்போது உங்களிடம் நல்ல உறவை மீண்டும் ஏற்படுத்திக் கொள்ள விரும்புவார்கள்.
Prev Topic
Next Topic