2020 புத்தாண்டு நிதி / பணம் ராசி பலன்கள் Rasi Palangal - Simma Rasi (சிம்ம ராசி)

நிதி / பணம்


முக்கிய கிரகங்கள் இணைந்து உங்கள் ராசியின் 5ஆம் வீடான பூர்வ புண்ய ஸ்தானத்தில் சஞ்சரிப்பது சிறப்பாக உள்ளது. இதனால் உங்கள் அதிர்ஷ்டம் பெரும் அளவு அதிகரிக்கும். நீங்கள் உங்கள் கடன் பிரச்சனைகளில் இருந்து வெளி வந்து விடுவீர்கள். உங்கள் கடனை நிதி மறு பரிசீலனை செய்யவும் இது நல்ல நேரம். உங்கள் கிரெடிட் மதிப்பு அதிகரிக்கும். உங்கள் வங்கி கடன் குறைந்த வட்டி விகிதத்திருக்கு எந்த சிக்கலும் இல்லாமல் ஒப்புதல் பெரும். பண வரத்து வெளிநாடுகளில் இருந்தும் ஏற்படும்.
உங்கள் தேவையற்ற மருத்துவ மற்றும் பயண செலவுகள் குறையும். உங்கள் குடும்பத்தினர்களுக்கு தங்க நகைகள் வாங்குவதில் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். உங்களுக்கு நல்ல மன நிம்மதி உண்டாகும் மேலும் உங்கள் வங்கி கணக்கில் இருக்கும் சேமிப்பு தொகை அதிகரிப்பதாலும், கடன்களை முற்றிலும் அடைத்து விட்டதாலும், உங்களுக்கு நல்ல தூக்கம் உண்டாகும். சனி பகவான் உங்கள் ராசியின் 6அம வீட்டிலும், ராகு 11ஆம் வீட்டிலும், குரு 5ஆம் வீட்டிலும் சஞ்சரித்து இந்த ஆண்டு உங்கள் வாழ்க்கையில் பல அற்புதங்களை செய்வார்கள்.



நீங்கள் வேலை பார்த்த முந்தய நிறுவனத்தில் இருந்தும், இன்சூரன்ஸ் நிறுவனத்தில் இருந்தும், அல்லது வழக்கில் கிடைக்கும் தீர்ப்பினாலும் உங்களுக்கு ஒரு பெரிய தொகை செட்டில்மென்ட்டாக கிடைக்கும். பெப்ரவரி, மார்ச், செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் உங்களுக்கு பண மழை உண்டாகும் என்பதை எதிர்பார்க்கலாம். உங்கள் கனவு இல்லத்திற்கு குடி பெயருவதால், நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். நீங்கள் ஆகஸ்ட் 2020 முதல் அக்டோபர் 2020 வரையிலான காலகட்டத்தில் உங்கள் அதிர்ஷ்டத்தை முயற்சி செய்து பார்க்கலாம். புது வாகனம் வாங்கி உங்கள் சௌகரியத்தை அதிகரித்துக் கொள்ள இது நல்ல நேரம்.





Prev Topic

Next Topic