![]() | 2020 புத்தாண்டு (முதல் பாகம்) ராசி பலன்கள் Rasi Palangal - Simma Rasi (சிம்ம ராசி) |
சிம்ம ராசி | முதல் பாகம் |
ஜனவரி 01, 2020 முதல் மார்ச் 29, 2020 வரை சிறப்பான நேரம் (85 / 100)
இந்த முதல் பாகத்தில் குரு உங்கள் ஜென்ம ராசியை 7 ஆண்டுகளுக்கு பிறகு பார்வையிடுகிறார். இதனால் உங்களுக்கு நல்ல அதிர்ஷ்டம் உண்டாகும். நவம்பர் 2019 முதல் நீங்கள் நல்ல மாற்றங்களை காண்பீர்கள். சனி பகவான் மகர ராசிக்கு ஜனவரி 23, 2020 அன்று பெயருவதால், உங்கள் தன்னம்பிக்கை மற்றும் சக்தியின் அளவு அதிகரிக்கும். மன குழப்பத்தில் இருந்தும், மன உளைச்சலில் இருந்தும் இந்த காலகட்டத்தில் வெளி வருவீர்கள். உங்கள் ஆரோக்கியத்தை மீண்டும் பெறுவீர்கள்.
நீண்ட காலமாக உங்கள் குடும்பத்தினரை விட்டு பிரிந்திருந்தால், அந்த பிரச்சனைகளில் இருந்து தற்போது வெளி வருவீர்கள். அவர்களுடன் மீண்டும் சேர்ந்து வாழ்வதை பற்றி நீங்கள் சிந்திக்க இது நல்ல நேரம். நீங்கள் விரும்பினால் ஒரு புதிய உறவைத் தொடங்கலாம். திருமணம் ஆனவர்கள் நல்ல அன்யுனியதோடு இருப்பார்கள். இயற்கையாகவோ அல்லது IVF அல்லது IUI போன்ற மருத்துவ சிகிச்சை மூலமாகவோ நீங்கள் குழந்தை பேருக்குத் திட்டமிடலாம். உங்கள திருமணத்தை நிச்சயிக்க இது நல்ல நேரம். உங்கள் குடும்பம் சமுதாயத்தில் நல்ல பெயரும் புகழும் பெரும்.
அலுவலகத்தில் உங்கள் திறமையை நிரூபிக்க உங்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். உங்களுக்கு ஒரு புதிய வேலை வாய்ப்பு நல்ல பதவியோடும், சம்பலத்தோடும் கிடைத்தால், அதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை. உங்கள் கடனை திருப்பி செலுத்தி விட உங்களுக்கு போதிய பண வரவு உண்டாகும். தொழிலதிபர்கள் சிறப்பான நிவாரணத்தை காண்பார்கள். உங்களது வளர்ச்சி விண்ணைத் தொடும் அளவிற்கு இருக்கும். நீங்கள் பணத்தை செமிக்கத்த் தொடங்குவீர்கள். பங்கு சந்தையில் பணத்தை முதலீடு செய்ய இது நல்ல நேரம். ரியல் எஸ்டேட் பரிவர்த்தனைகள் உங்களுக்கு வெற்றியைத் தரும்.
Prev Topic
Next Topic