2020 புத்தாண்டு (நான்காம் பாகம்) ராசி பலன்கள் Rasi Palangal - Simma Rasi (சிம்ம ராசி)

நவம்பர் 20, 2020 முதல் டிசம்பர் 31, 2020 வரை கடுமையான சோதனை காலம் (40 / 100)


இந்த காலகட்டத்தில் அதிக கவனத்தோடு நீங்கள் இருக்க வேண்டும். செவ்வாய் உங்கள் ராசியின் 8ஆம் வீட்டிலும், குரு 6ஆம் வீட்டிலும் சஞ்சரித்து உங்களுக்கு தேவையற்ற பயம் மற்றும் பதற்றத்தை உண்டாக்கக் கூடும். உங்கள் உடல் உபாதைகள் அதிகரிக்கக் கூடும். நீங்கள் உங்கள் உடல் நலத்தின் மீது கவனம் செலுத்த வேண்டும். உங்கள் மருத்துவ செலவுகளும், பயண செலவுகளும் அதிகரித்து உக்னால் நிதி நிலையை பாதிக்கக் கூடும்.
உங்கள் நிறுவனத்தில் மாற்றங்கள் ஏறபடும். மேலும் புதிய நபர்கள் உங்கள் குழுவில் சேருவார்கள். அலுவலகத்தில் அரசியல் அதிகரிக்கும். உங்களுக்கு ஒரு நல்ல செய்தி என்னவென்றால், சனி பகவான் 6ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்களுக்கு பாதுகாப்பைத் தருவார். உங்கள் வேலை சுமையும், அலுவலகத்தில் அரசியலும் அதிகமாக இருக்கக் கூடும். எனினும், உங்களால் தக்க நேரத்தில் ப்ரோஜெக்ட்டை முடிக்க முடியும். தொழிலதிபர்கள் போட்டியாலர்களாலும், பங்குதார்களாலும் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.


முடிந்த வரை பயணம் செய்வதை தவிர்ப்பது நல்லது. விசா குறித்த விடயங்களில் அதிக தாமதம் ஏற்படக் கூடும். அதிகரிக்கும் செலவுகளால் உங்கள் சேமிப்பு பாதிக்கப் படும். பங்கு சந்தை வர்த்தகத்தில் ரிஸ்க் எடுக்க இது நல்ல நேரம் இல்லை, நல்ல யோசனையும் இல்லை. உங்கள் பிறந்த சாதக பலன் இல்லாமல் ரியல் எஸ்டேட் முதலீடுகள் செய்வதை தவிர்ப்பது நல்லது.



Prev Topic

Next Topic