2020 புத்தாண்டு உடல் நலம் ராசி பலன்கள் Rasi Palangal - Simma Rasi (சிம்ம ராசி)

உடல் நலம்


குரு உங்கள் ராசியின் 5ஆம் வீட்டில் சஞ்சரித்து நீங்கள் மன அழுத்தம் மற்றும் பதற்றத்தில் இருந்து வெளி வர உதவுவார். நீங்கள் பல ஆண்டுகள் இழந்த தூக்கத்தை இப்போது பெறுவீர்கள். உங்களுக்கு சரியான மருந்து கிடைத்து விரைவாக குணமடைவீர்கள. குறிப்பாக உங்கள் உளவியல் ரீதியான பிரச்சனைகளில் இருந்து வெளி வந்து விடுவீர்கள். சுதர்சன மகா மந்திரம் மற்றும் ஹனுமான் சலிச கேட்பதால் சற்று ஆறுதலாக இருக்கும்.
சனி பகவான் உங்கள் ராசியின் 6ஆம் வீட்டில் ஜனவரி 23, 2020 முதல் சஞ்சரிபதால், நீங்கள் பெப்ரவரி 2020 முதல் இழந்த உங்கள் தன்னம்பிக்கையை முற்றிலும் பெற்று விடுவீர்கள். உங்கள் மருத்துவ செலவுகள் குறையும். நல்ல சக்திகளைப் பெறுவீர்கள். குரு உங்கள் ராசியின் 6ஆம் வீட்டிலு ஏப்ரல், மே மற்றும் ஜூன் 2020 ஆகிய மாதங்களில் சஞ்சரித்தாலும், அதன் தாக்கம் குறைவாகவே இருக்கும். சனி பகவான் மற்றும் செவ்வாய் உங்கள் ராசியின் 6ஆம் வீட்டில் இந்த காலகட்டத்தில் சஞ்சரித்து உங்களுக்கு தொடர்ந்து நல்ல உடல் நலத்தை தருவார்.



உங்கள் மருத்துவ செலவுகள் குறையும். உங்கள் மனைவி/கணவன், குழந்தைகள், மற்றும் பெற்றோர்களின் உடல் நலத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். செப்டம்பர் 2020 வாக்கில் நீங்கள் காதலில் விழுந்தால், அதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை. மூச்சி பயிற்சி செய்வதால், விரைவாக நேர்மறை சக்திகளைப் பெறுவீர்கள்.




Prev Topic

Next Topic