![]() | 2020 புத்தாண்டு காதல் ராசி பலன்கள் Rasi Palangal - Simma Rasi (சிம்ம ராசி) |
சிம்ம ராசி | காதல் |
காதல்
காதலர்கள் கடந்த ஒரு ஆண்டு காலமாக, குறிப்பாக பெப்ரவரி 2019 முதல் அக்டோபர் 2019 வரையிலான காலகட்டத்தில் மோசமான சூழலை சந்தித்திருந்திருப்பார்கள். மேலும் நீங்கள் இயல்பாகவே அதிகம் உணர்ச்சிவசப்படுபவராக இருப்பதால், விடயங்கள் மேலும் மோசமாகி இருந்திருக்கும். உங்கள் உளவில் பிரச்சனைகளை சரி செய்ய உங்களுக்கு மருத்துவ உதவியும் தேவை பட்டிருக்கும். மேலும் காதல் தோல்வி, அவமானம், துரோகம் மற்றும் சதி என்று பல உங்கள் மனதை அக்டோபர் 2019 வரை அதிக அளவு பாதித்திருந்திருக்கும்.
குரு 7 ஆண்டுகளுக்கு பிறகு உங்கள் ஜென்ம ராசியை பார்வை இடுவதால், விடயங்கள் உங்களுக்கு சாதகமாக தற்போது திருப்பம் பெரும். உங்கள் காதலை மீண்டும் பரிசீலனை செய்ய இது நல்ல நேரம். அப்படி உங்களால் மீண்டும் உங்கள் உறவை புதுபித்துக் கொள்ள முடியவில்லை என்றால், பெப்ரவரி / மார்ச் 2020 முதல் நீங்கள் ஒரு புதிய உறவை உருவாக்கிக் கொள்ளலாம். நீங்கள் திருமணம் ஆகாதவராக இருந்தால், உங்களுக்கு ஏற்ற வரன் கிடைத்து, பெப்ரவரி 2020க்கு மேல் திருமணம் நிச்சயமும் ஆகும். திருமணம் ஆன தம்பதியினர் இந்த ஆண்டு நல்ல அன்யுனியத்தோடு இருப்பார்கள். மேலும் குழந்தை பேரு பெரும் பாக்கியமும் உங்களுக்கு உள்ளது. IVF மற்றும் IUI போன்ற மருத்துவ சிகிச்சையையும் செய்து கொள்ளலாம்.
Prev Topic
Next Topic