2020 புத்தாண்டு ராசி பலன்கள் Rasi Palangal - Simma Rasi (சிம்ம ராசி)

கண்ணோட்டம்


முக்கிய கிரகங்கள் உங்கள் ராசியின் பூர்வ புண்ய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால், இந்த புத்தாண்டு உங்களுக்கு மகிழ்ச்சியோடு தொடங்கும். அனைத்து முக்கிய கிரகங்களும் நல்ல நிலையில் சஞ்சரிகின்றனர். குரு உங்கள் ஜென்ம ராசியை 7 ஆண்டுகளுக்கு பிறகு பார்வை இடுகிறார். சனி பகவான் மகர ராசிக்கு ஜனவரி 23, 2020 அன்று பெயருவதால், உங்கள் வளர்ச்சியும், வெற்றியும் அதிகரிக்கும்.
நீண்ட காலமாக உங்களுக்கு இருந்த மன பதற்றம் மற்றும் அழுத்தத்தில் இருந்து வெளி வருவீர்கள்.. உங்கள் உத்தியோகத்தில் நல்ல மாற்றங்களை காண்பீர்கள். உங்கள் நிதி நிலை சிறப்பாக இருக்கும். பங்கு சந்தை வர்த்தகத்தில் இருந்து உங்களுக்கு நல்ல லாபம் கிடைப்பதால், நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். புது வீட்டிற்கு குடி பெயருவதால் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.


வெளிநாட்டிற்கு பயணம் செய்ய உங்களுக்கு வாய்ப்புகள் வரும். உங்கள் மகா தசை சாதகமாக இருந்தால், நீங்கள் முக்கியத்துவர் அந்தஸ்த்தை அடைவீர்கள். உங்களது நீண்ட கால ஆசைகளும்,, வாழ்நாள் கனவும் இந்த 2020ஆம் ஆண்டு நிறைவேறும். இந்த ஆண்டை பயன்படுத்திக் கொண்டு உங்கள் வாழ்க்கையில் நல்ல நிலையில் நீங்கள் செட்டில் ஆகலாம்.




Prev Topic

Next Topic