![]() | 2020 புத்தாண்டு திரைத்துறை, கலைத்துறை, விளையாட்டு துறை மற்றும் அரசியலில் இருப்பவர்கள் ராசி பலன்கள் Rasi Palangal - Simma Rasi (சிம்ம ராசி) |
சிம்ம ராசி | திரைத்துறை, கலைத்துறை, விளையாட்டு துறை மற்றும் அரசியலில் இருப்பவர்கள் |
திரைத்துறை, கலைத்துறை, விளையாட்டு துறை மற்றும் அரசியலில் இருப்பவர்கள்
ஊடகத் துறையில் இருப்பவர்கள் இந்த ஆண்டு பொற்காலத்தை காண்பார்கள். குரு உங்கள் ராசியின் 5ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்கள் சக்தியை அதிகரிக்க உதவுவார். உங்களுக்கு நல்ல உற்சாகம் உண்டாகம். ஊடகமும், மக்களும், உங்களை நோக்கி ஈர்க்கப்படுவார்கள். உங்களுக்கு பல நல்ல வாய்ப்புகளும், முக்கியமாக பெரிய படங்களில் பணி புரியும் வாய்ப்புகளும் கிடைக்கும். சனி பகவான் உங்கள் ரூன ரோக சத்ரு ஸ்தானத்திற்கு ஜனவரி 23, 2020 அன்று பெயர்ந்ததும், நீங்கள் ஒரு முக்கியத்துவர் அந்தஸ்த்தை பெறுவீர்கள்.
சிறப்பான நிதி சன்மானங்கள் மற்றும் வருமானமும் உங்களுக்கு உண்டாகும். புது வீடு வாங்கி குடி பெயர இது நல்ல நேரம். மேலும் ஒரு நல்ல வரனை பார்த்து திருமணம் செய்து கொள்ளவும் இது நல்ல நேரம். அரசியலில் இருப்பவர்கள், தேர்தலில் பெரிய அளவில் வெற்றி பெறுவார்கள். நீங்கள் உங்கள் கட்சியில் தலைமை பதவியைப் பெறுவீர்கள். அதிக புகழைப் பெறுவீர்கள். உங்களுக்கு மக்களிடம் இருந்து நல்ல மதிப்பு கிடைக்கும். சட்ட பிரச்சனைகள் அல்லது வருமான வரி பிரச்சனைகள் ஏற்பட்டிருந்தால், அதில் இருந்து முற்றிலுமாக வெளி வந்து விடுவீர்கள்.
Should you have any questions based on your natal chart, you can reach out KT Astrologer for consultation, email: ktastrologer@gmail.com
Prev Topic
Next Topic