![]() | 2020 புத்தாண்டு (இரண்டாம் பாகம்) ராசி பலன்கள் Rasi Palangal - Simma Rasi (சிம்ம ராசி) |
சிம்ம ராசி | இரண்டாம் பாகம் |
மார்ச் 29, 2020 முதல் நுழை 01, 2020 வரை உடல் நல பிரச்சனைகள், அலுவலகத்தில் அரசியில் (40 / 100)
இந்த காலகட்டத்தில் குரு மகர ராசிக்கு பெயருவார். குரு ரூன ரோக சத்ரு ஸ்தானத்தில் சஞ்சரித்து உங்களுக்கு உடல் நல பிரச்சனைகளை தரக் கூடும். சனி பகவான் உங்கள் ராசியின் 6ஆம் வீட்டில் சஞ்சரித்து நீங்கள் விரைவாக குணமடைய உதவுவார். உங்கள் மனைவி/கணவன், குழந்தைகள் அல்லது பெற்றோகளுடன் கருத்து வேறுபாடு உண்டாகக் கூடும். இந்த பிரச்சனைகளை சமாளிக்க நீங்கள் அதிக பொறுமையோடு இருக்க வேண்டும்.
உங்கள் வேலை சுமை மற்றும் அலுவலகத்தில் அரசியல் அதிகமாக இருக்கும், உங்கள அலுவலகத்தில் உங்கள் வளர்ச்சியை பாதிக்கும் வகையில் தேவையற்ற மாற்றங்கள் ஏற்படக் கூடும். எனினும், இந்த பாகத்தில் நடப்பவை தற்காலிகமானவை. நீண்ட கால அடிப்படையில் இதனால் உங்கள் உத்தியோகத்தில் எந்த மாற்றமும் ஏற்படாது. தொழிலதிபர்கள குறைந்த வளர்ச்சியையும், அதிக போட்டிகளையும் சந்திக்க நேரிடும். உங்கள் செலவுகள் எதிர்பாராத மருத்துவ செலவுகள், பயணம் மற்றும் ஆடம்பர பொருட்கள் வாங்குவதால் அதிகரிக்கக் கூடும். உங்கள் கிரெடிட் கார்டு நிலுவைத் தொகை அதிகரிக்கும். உங்கள் வங்கிக் கடன் போதிய ஆவணங்கள் இல்லாததால், எந்த முன்னேற்றமும் இல்லாமல் தேக்கமடையும்.
இந்த பாகத்தில் பங்கு சந்தை வர்த்தகத்தை தவிர்ப்பது நல்லது. நீண்ட கால முதலீடுகள் சனி பகவான் 6ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் சிறப்பாக இருக்கும். உங்கள் மகா தசை பலவீனமாக இருந்தால், உங்களுக்கு இந்த பாகத்தில் நட்டம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இந்த பாகத்தில் ரியல் எஸ்டேட் பரிவர்த்தனைகளை தவிர்ப்பது நல்லது.
Prev Topic
Next Topic