![]() | 2020 புத்தாண்டு (மூன்றாம் பாகம்) ராசி பலன்கள் Rasi Palangal - Simma Rasi (சிம்ம ராசி) |
சிம்ம ராசி | மூன்றாம் பாகம் |
ஜூலை01, 2020 முதல் நவம்பர் 20, 2020 வரை நல்ல அதிர்ஷ்டம் (90 / 100)
குரு பகவான் உங்கள் ராசியின் 5ஆம் வீடான பூர்வ புண்ய ஸ்தானத்திற்கு மீண்டும் பெயருகிறார். இதனால் உங்களுக்கு நல்ல நிவாரணம் கிடைக்கும். உங்களுக்கு கடந்த மாதங்களில் ஏற்பட்ட பின்னடைவுகளில் இருந்து வெளி வருவீர்கள். இந்த காலகட்டத்தில் விடயங்கள் நலல் முன்னேற்றம் பெரும். குரு செப்டம்பர் 13, 2020 அன்று வக்கிர நிவர்த்தி அடைகிறார்.
இந்த பாகம் உங்கள் வாழ்க்கையிலேயே ஒரு சிறந்த காலகட்டமாக இருக்கும். உங்கள் வாழ்நாள் கனவு மற்றும் நீண்ட கால ஆசைகள் நிறைவேறும். உங்கள் உடல் நலம் சிறப்பாக இருக்கும். உங்கள் தன்னம்பிக்கையின் அளவு அதிகரிக்கும். இந்த காலகட்டத்தில் உங்களுக்கு பண மழை பொழியும். உங்கள் மனைவி/கணவன் மற்றும் குடும்பத்தினர்கள் உங்கள் வளர்ச்சிக்கும், வெற்றிக்கும் உறுதுணையாக இருப்பார்கள். நீங்கள் செய்யும் எந்த காரியமாக இருந்தாலும், அது பெரிய அளவு வெற்றிப் பெரும். நீங்கள் நல்ல உற்சாகத்தோடு இருப்பீர்கள். இதனால் மக்கள் உங்களை நோக்கி ஈர்க்கப் படுவார்கள். உங்கள் மகா தசை சாதகமாக இருந்தால், நீங்கள் சமுதாயத்தில் நல்ல பெயரைப் பெறுவீர்கள் அலட்ல்ஹு முக்கியத்தவர் அந்தஸ்த்தைப் பெறுவீர்கள்.
நீங்கள் காதலில் விழுவீர்கள். உங்களுக்கு ஏற்ற வரனை பார்த்து திருமணம் முடிக்க இது சிறப்பான நேரம். திருமணம் ஆன தம்பதியினர் நல்ல அன்யுனியத்தோடு இந்த காலகட்டத்தில் இருப்பார்கள். மேலும் குழந்தை பேரு பெரும் பாக்கியமும் சிறப்பாக உள்ளது. சுப காரியங்கள் நிகழ்த்துவதில் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். நீங்கள் நீண்ட காலமாக காத்திருந்த பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு இந்த காலகட்டத்தில் உங்களுக்கு கிடைக்கும். உங்களுக்கு பங்குகள் கிடைப்பதால், போனஸ் மற்றும் சன்மானங்கள் கிடைப்பதால் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். புது வேலை வாய்ப்பை பெற்று, பெரிய நிறுவனத்தில் சேர இது நல்ல நேரம். தொழிலதிபர்கள் தங்கள் லாபத்தை பணமாக்க இது நல்ல நேரம். புது வீடு வாங்கி குடி பெயர இது நல்ல நேரம். தானம் செய்து புண்ணியங்களை சேர்த்துக் கொள்ள முயற்சி செய்யுங்கள்
Prev Topic
Next Topic