![]() | 2020 புத்தாண்டு பயணம் மற்றும் குடியேற்ற பலன்கள் ராசி பலன்கள் Rasi Palangal - Simma Rasi (சிம்ம ராசி) |
சிம்ம ராசி | பயணம் மற்றும் குடியேற்ற பலன்கள் |
பயணம் மற்றும் குடியேற்ற பலன்கள்
இந்த 2020ஆம் ஆண்டு தொலைதூர மற்றும் குறுகிய தூர பயணம், ஆகிய இரண்டும் உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும். குரு உங்கள் ராசியின் 5ஆம் வீட்டிலும், சனி பகவான் 6ஆம் வீட்டிலும், ராகு 11ஆம் வீட்டிலும் சஞ்சரித்து உங்களுக்கு நல்ல அதிர்ஷ்டத்தை தருவார்கள். பயண சீட்டு, தங்கும் விடுதி, வாடகைக்கு கார் போன்ற விடயங்களில் நல்ல சலுகைகள் கிடைக்கும். உங்களுக்கு ஏற்படும் தேவையற்ற பயம் மற்றும் பதற்றத்தில் இருந்து வெளி வந்து விடுவீர்கள்.
உங்களுக்கு விசா குறித்த பிரச்சனைகள் ஏற்பட்டிருந்தால், அது உங்களுக்கு சாதகமாக பெப்ரவரி / மார்ச் 2020 வாக்கில் ஒப்புதல் பெரும். உங்களுக்கு வெளிநாட்டு பயணம் செய்ய நல்ல வாய்ப்பு கிடைக்கும். விசா ஸ்டம்பிங் செய்ய இது நல்ல நேரம். உங்கள் குடியேற்ற பலன்கள் எந்த தாமதமும் இல்லாமல் ஒப்புதல் பெரும். புது வாகனம் வாங்குவதால் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.
Prev Topic
Next Topic