2020 புத்தாண்டு வேலை / உத்தியோகம் ராசி பலன்கள் Rasi Palangal - Simma Rasi (சிம்ம ராசி)

வேலை / உத்தியோகம்


சனி பகவான் மற்றும் கேது இணைந்து உங்கள் ராசியின் 5ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்களுக்கு போதிய பிரச்சனைகளை கடந்த ஆண்டு உங்கள் உத்தியோகத்தில் தந்திருப்பார்கள். இதனால் நீங்கள் வேலையில் உற்சாகம் இல்லாமலும், பல இன்னல்களையும் சந்தித்திருந்திருப்பீர்கள். தற்போது உங்கள் உத்தியோகம் குறித்த விடயங்களுக்கு சிறப்பான நேரமாக இந்த ஆண்டு உள்ளது. நீங்கள் உங்கள் வேலையை இழந்திருந்தால், அல்லது தற்போது பார்க்கும் வேலையில் மகிழ்ச்சியாக இல்லையென்றால், புது வேலைக்கு முயற்சி செய்யலாம்.
நல்ல சம்பளத்தோடு உங்களுக்கு நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கும். மேலும் நீங்கள் எதிர்பார்க்கும் சம்பளமும், பதவியும் உங்களுக்கு கிடைக்கும். உங்கள் புது வேலை வாய்ப்பு நீங்கள் விரும்பும் இடத்திலேயே கிடைக்கும். உங்களுக்கு வெளிநாடு பயணம் செய்யவும் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். உங்களுடன் வேலை பார்ப்பவர்கள் மற்றும் மேலாளர்கள் உங்களுக்கு நல்ல உறுதுணையாக இருப்பார்கள். நல்ல முன்னேற்றம் தரக்கூடிய ப்ரோஜெக்ட்டில் வேலை பார்க்க உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். மேலும் இந்த 2020ஆம் ஆண்டு உங்களுக்கு சம்பள உயர்வும் கிடைக்க வாய்ப்பு உள்ளது.


அனைத்து முக்கிய கிரகங்களான, சனி பகவான், ராகு, குரு மற்றும் கேது நல்ல நிலையில் ஜனவரி 2020 முதல் சஞ்சரிக்கின்றனர். நீங்கள் நீண்ட கால திட்டங்களை செயல்படுத்தத் தொடங்கலாம். அடுத்த 3 ஆண்டுகளுக்கு சனி பகவான் நல்ல நிலையில் சஞ்சரிப்பதால், அடுத்த சில ஆண்டுகளுக்கு உங்கள் உத்தியோகத்தில் நல்ல வளர்ச்சி உண்டாகும். மேலும் நீங்கள் மேலாளர் பதவியையும் பெறுவீர்கள். நீங்கள் ஒப்பந்தம் அடிப்படையில் வேலை பார்த்துக் கொண்டிருந்தாள், அது நிறைந்தரமாகும். அரசு வேலை கிடைக்கவும் வாய்ப்பு உள்ளது. இன்சூரன்ஸ், பங்குகள், குடியேற்றம் மற்றும் விசா போன்ற சலுகைகள் உங்கள் நிறுவனத்தில் இருந்து கிடைக்கும்.



Prev Topic

Next Topic