2020 புத்தாண்டு தொழில் மற்றும் இரண்டாம் வருமானம் ராசி பலன்கள் Rasi Palangal - Thula Rasi (துலா ராசி)

தொழில் மற்றும் இரண்டாம் வருமானம்


ஜனவரி 23, 2020 முதல் உங்களுக்கு அர்தஷ்டம சனி தொடங்கவுள்ளது. இது தொழிலதிபர்களுக்கு ஒரு எச்சரிக்கை மணியாகும். உங்கள் தொழிலை தொடர்ந்து நடத்தவும், வெற்றி பெறவும், உங்கள் பிறந்த சாதகத்தை பார்த்து அதன் படி செயல்படுவது நல்லது. சிறு தவருகளால், உங்கள் போட்டியாளர்களிடம் உங்களுக்கு கிடைத்த நல்ல ப்ரோஜெக்ட்டை நீங்கள் இழக்க கூடும். உங்களுக்கு மறைமுக எதிரிகளால் பிரச்சனைகள் ஏற்படக் கூடும். உங்களுக்கு எதிரான சதியால், உங்கள் மீது தவறான குற்றசாட்டு வைக்கப்படலாம்.
உங்கள் தொழிலில் இருக்கும் பங்குதாறரால் உங்களுக்கு பிரச்சனைகள் ஏற்படக் கூடும். மேலும், உங்களுக்கு சட்ட உதவியும் இதன் காரணமாக தேவைப்படலாம். உங்களுக்கு நிதி பிரச்சனைகள் ஏற்படக் ஓடும். ஆகஸ்ட் 2020 முதல் நவம்பர் 2020வரையிலான காலகட்டத்தில், நீங்கள் பண விடயத்தில் ஏமாற்றப் படலாம். நீங்கள் உங்கள் நிதி தேவைகளை சமாளிக்க கடன் வாங்க வேண்டிய சூழல் ஏற்படலாம். அரசின் புதிய சட்டத்தாலும், பண மதிப்பு இழப்பு காரணமாகவும் அல்லது வேறு காரணங்களாலும் உகள் தொழிலில் பின்னடைவுகள் ஏற்படக் கூடும்.


சரியான நேரத்தில் உங்களால் ப்ரோஜெக்ட்டை முடிக்க முடியாமல் போவதால், உங்கள் நற்பெயர் பாதிக்கக் கூடும். உங்கள் போட்டியாளர்கள் உங்களது இந்த பலவீனமாக நிலையை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்வார்கள். முடிந்த வரை உங்கள் தொழிலை இந்த காலகட்டத்தில் விரிவுபடுத்த முயற்சிப்பதை தவிர்ப்பது நல்லது. உங்கள் நிர்வாக செலவுகளை கட்டுபடுத்த முயற்சி செய்யுங்கள். சுய தொழில் புரிவோர்கள், இன்சூரன்ஸ் ஏஜெண்டுகள், கமிசன் ஏஜெண்டுகள் எந்த பலனும் இன்றி கடுமையாக உழைக்க வேண்டிய சூழல் ஏற்படக் கூடும்


Prev Topic

Next Topic