2020 புத்தாண்டு நிதி / பணம் ராசி பலன்கள் Rasi Palangal - Thula Rasi (துலா ராசி)

நிதி / பணம்


அர்தாஷ்டம சனியால் நீங்கள் தற்போது சோதனை காலத்தில் இருக்கின்றீர்கள். உங்கள் சேமிப்புகள் விரைவாக அதிகரிக்கும் செலவுகளால் கரையும். அடுத்த சில ஆண்டுகளுக்கு உங்கள் மாதாந்திர நிதி தேவைகள் அதிகரித்துக் கொண்டே இருக்கும். தற்போது உங்கள் செலவுகளை குறைந்த வருமானத்தைக் கொண்டு சமாளிப்பது உங்களுக்கு க்கிக் கடினமான ஒன்றாக இருக்கும்.
வரும் நாட்களில் யாருக்கும் பணம் கடன் கொடுப்பதோ அல்லது கடன் வாங்குவதோ பாதுகாப்பாக இருக்காது. உங்கள் மகா தசை பலவீனமாக இருந்தால், உங்களுக்கு புதிய கடன் சேர்ந்து கொண்டே இருக்கும். உங்கள் வங்கி கடன் அதிக வட்டி விகிதத்திற்கு ஒப்புதல் பெரும். உங்கள் வீட்டிற்கு விருந்தினர்கள் அருகை தந்து கொண்டே இருப்பார்கள், இதனால் அவர்களை உபசரிப்பதற்கே உங்களுக்கு செலவுகள் மிக அதிமாக அதிகரிக்கும்.


அதிகரிக்கும் கடனால் உங்கள் கிரெட்டி மதிப்பு குறைந்து கொண்டே போகும். வட்டி விகிதம் மேலும் அதிகரித்துக் கொண்டே போகும், இதனால் உங்கள் நிதி நிலை மேலும் மோசமாகக் கூடும். உங்கள் வங்கிக் கடன் ஆகஸ்ட் 2020க்கு மேல் ஒப்புதால் பெறாமல் போகலாம். நீங்கள் கவனமாக இல்லையென்றால், உங்கள் சொத்துகளை குறைந்த விலைக்கு நீங்கள் விற்க நேரிடும். மேலும் பண விடயங்களில் உங்கள் நண்பர்கள், உறவினர்கள் மற்றும் தொழிலில் இருக்கும் பங்குதாரர்கள் உங்களை ஏமாற்றக் கூடும். குறிப்பாக ஆகஸ்ட் 2020க்கு மேல் இந்த நிலை ஏற்படக் கூடும். பெருமாளை வணங்கி, சுதர்சன மகா மந்திரத்தை கேட்டு வந்தால், உங்களுக்கு சற்று பாதுகாப்பு கிடைக்கும்.



Prev Topic

Next Topic