2020 புத்தாண்டு (முதல் பாகம்) ராசி பலன்கள் Rasi Palangal - Thula Rasi (துலா ராசி)

ஜனவரி 01, 2020 முதல் மார்ச் 29, 2020 வரை சோதனை காலத்தின் தொடக்கம் (40 / 100)


குரு உங்கள் ராசியின் 3ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்கள் வளர்ச்சியை இந்த ஆண்டின் தொடக்கத்தில் பாதிக்கக் கூடும். சனி பகவான் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு ஜனவரி 23, 2020 அன்று பெயருகிறார். உங்கள் மகா தசை பலவீனமாக இருந்தால், இந்த பாகத்தில் நீங்கள் அதிக பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
பெப்ரவரி 2020 முதல் உங்கள் உடல் நலம் பெரிதும் பாதிக்கக் கூடும். உங்கள் பெற்றோர்களின் உடல் நலத்தின் மீது இந்த காலகட்டத்தில் அதிக கவனம் தேவை. உங்கள் குடும்பத்தினர்களுடன் இருக்கும் உறவு சுமூகமாக இருக்காது. காதலர்கள் சில பிரச்சனைகளை தங்கள் உறவில் சந்திப்பார்கள். திருமணம் ஆனவர்கள் அன்யுனியம் குறைந்து காணப்படுவார்கள். குழந்தை பேருக்கு திட்ட மிட இது ஏற்ற நேரம் இல்லை.


உங்கள் உத்தியோகத்தில் சில பின்னடைவுகள் ஏற்படக் கூடும். இந்த அர்தஷ்டம சனி நடக்கும் காலத்தில் உங்கள் உத்தியோகத்தில் மாற்ற முயற்சி செய்வதை தவிர்ப்பது நல்லது. அதிக செலவுகள் ஏற்படுவதால், உங்கள் சேமிப்பு விரைவாக கரையும். உங்கள் வங்கி கடன் அதிக வட்டி விகிதத்திற்கு ஒப்புதல் பெரும்.
நீங்கள் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பணம் கடன் கொடுத்தால், அது திரும்பி வராது. ஸ்பெகுலேடிவ் வர்த்தகம் செய்யும் போது அதிக கவனம் தேவை. பெப்ரவரி மாதம் முதல் உங்களுக்கு அதிக நட்டம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஜனவரி 18, 2020க்கு முன் உங்கள் லாபத்தை பணமாக்கி அசைய சொத்துக்கள் மீது முதலீடு செய்து விடுவது நல்லது.



Prev Topic

Next Topic