![]() | 2020 புத்தாண்டு (நான்காம் பாகம்) ராசி பலன்கள் Rasi Palangal - Thula Rasi (துலா ராசி) |
துலா ராசி | நான்காம் பாகம் |
நவம்பர் 20, 2020 முதல் டிசம்பர் 31, 2020 வரை நல்ல முன்னேற்றம் / நிவாரணம் (55 / 100)
குரு உங்கள் ராசியின் 4ஆம் வீட்டிற்கு பெயர்ந்து உங்களுக்கு ஏற்பட்ட பின்னடைவுகளில் இருந்து மீண்டு வர உதவுவார். உங்கள் உடல் நல பிரச்சனைகள் சரியான மருந்து கிடப்பதால் விரைவில் குணமாகும். உங்கள் குடும்பத்தினர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். உங்கள் குழந்தைகள் உங்கள் பேச்சை கேட்பார்கள். உங்கள் மகன் மற்றும் மகளுக்கு திருமணம் நிச்சயிக்க நேரம் நன்றாக உள்ளது. எனினும், சுப காரியம் நிகழ்த்தும் போது அதிக அழுத்தம் நிறைந்த சூழல் ஏற்படும்.
அலுவலகத்தில் நல்ல சூழல் நிலவும். உங்கள் மேலாளதிகாரிகள் உங்களை சரியாக வழிநடத்தி நீங்கள் நல்ல நிலைக்கு மீண்டும் வர உதவுவார்கள். உங்கள் வேலை சுமை மற்றும் பத்தற்றம் குறையும். உங்கள் குடும்பத்தினர்களுடன் செலவிட போதிய நேரம் கிடைக்கும். எனினும், உங்கள் உத்தியோகத்தில் நல்ல வளர்ச்சியை பெறவோ, அல்லது புது வேலைக்கு முயற்சி செய்யவோ நீங்கள் காத்திருக்க வேண்டும். தொழிலதிபர்கள் ஓரளவிற்கு நிவாரணத்தை பெறுவார்கள். எனினும், புது ப்ரோஜெக்ட்டுகள் பெற சில காலம் காத்திருக்க வேண்டும்,.
பயணம் உங்களுக்கு கலவையான பலனைத் தரும். உங்கள் நிதி நிலையில் சற்று முன்னேற்றம் ஏற்படும். உங்கள் வங்கி கடன் ஒப்புதல் பெரும். உங்கள் செலவுகள் குறையும். அதனால் நீங்கள் விரைவாக உங்கள் கடனை திருப்பி செலுத்தி விடுவீர்கள. எனினும், பங்கு சந்தை முதலீடுகளில் இருந்து முற்றிலும் விலகி இருப்பது நல்லது. உங்கள் சொத்துக்களை விற்று பண வரத்தை உண்டாக்கி, கடனை அடைத்து விட இது நலல் நேரம். எனினும், புதிதாக சொத்துக்கள் வாங்குவதை இந்த பாகத்தில் தவிர்ப்பது நல்லது.
Prev Topic
Next Topic