![]() | 2020 புத்தாண்டு காதல் ராசி பலன்கள் Rasi Palangal - Thula Rasi (துலா ராசி) |
துலா ராசி | காதல் |
காதல்
இந்த 2020ஆம் ஆண்டு உங்கள் காதல் வாழ்க்கைக்கு சவால் நிறைந்த ஆண்டாக இருக்கும். நீங்கள் விரும்புபவருடன் காதலுக்கு பதிலாக அதிக சண்டைகள் ஏற்படக் கூடும். உங்கள் இருவருக்கும் தேவையற்ற கருத்து வேறுபாடும், தேவையற்ற வாக்குவாதங்களும் ஏற்படக் கூடும். இது குறிப்பாக உங்கள் வாழ்க்கையில் நீங்கள் செட்டில் ஆவதை பற்றி பேசும் போது ஏற்படும். நீங்கள் திருமணம் ஆகாதவராக இருந்தால், அடுத்த ஒரு ஆண்டுக்கு எந்த ஒரு முயற்சியும் எடுக்காமல் இருப்பது நல்லது. மேலும் நீங்கள் யாரையாவது விரும்பினால் அவரிடம் உங்கள் காதலை கூற இது ஏற்ற நேரமும் இல்லை.
திருமணம் ஆன தம்பதியினருக்கு அதிகரிக்கும் உடல் நல பிரச்சனைகள் மற்றும் பதற்றத்தால், அன்யுனியம் குறைந்து காணப்படும். உங்கள் மகா தசை பலவீனமாக இருந்தால், நீங்கள் இருவரும் செப்டம்பர் 2020 முதல் நவம்பர் 2020 வரையிலான காலகட்டத்தில், உங்கள் இருவருக்குள்ளும் ஏற்படும் பிரச்சனைகளால், தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ பிரியக் கூடும். நீங்கள் பெண்ணாக இருந்தால், உங்கள் பிறந்த சாதக பலன் இல்லாமல், குழந்தை பெற்றுக் கொள்ளத் திட்டமிடுவதை தவிர்ப்பது நல்லது. மேலும் IVF மற்றும் IUI போன்ற சிகிச்சையும் உங்களுக்கு ஏமாற்றத்தை தரக் கூடும்.
Prev Topic
Next Topic