2020 புத்தாண்டு ராசி பலன்கள் Rasi Palangal - Thula Rasi (துலா ராசி)

கண்ணோட்டம்


குரு உங்கள் ராசியின் 3ஆம் வீட்டில் சஞ்சரித்து, நவம்பர் 2019 முதல் சில மாதங்களாக உங்களுக்கு கிடைக்கும் அதிர்ஷ்டதத்தில் பாதிப்புகளை ஏற்படுத்தி இருப்பார். சனி பகவான் உங்கள் ராசியின் 4ஆம் வீடான அர்தஷ்டம ஸ்தானத்தில் ஜனவரி 23, 2020 முதல் சஞ்சரிப்பார். இது உங்களுக்கு நல்ல செய்தி இல்லை. குரு மற்றும் சனி பகவான் ஜனவரி மாதத்தின் இறுதி பகுதியில் உங்களுக்கு எதிராக சஞ்சரிப்பார்கள். இதனால் நீங்கள் பல விடயங்களில் சவால்களை சந்திப்பீர்கள். உங்கள் பெற்றோர்களின் உடல் நலத்தில் பாதிப்புகள் ஏற்படக் கூடும். உங்கள் அலுவலகத்தில் மன அழுத்தம் மற்றும் பதற்றம் ஏற்படக் கூடிய சூழல் உண்டாகும். தொழிலதிபர்கள் தங்கள் தொழிலை தொடர்ந்து நடத்த பிறந்த சதாகத்தின் பலனை பெற வேண்டும்.
உங்கள் சொந்த வாழ்க்கையில் அதிக கவனம் தேவை. செப்டம்பர் 2020 வாக்கில் உங்களுக்கு சட்ட பிரச்சனைகள் ஏற்படக் கூடும். இந்த ஆண்டு முக்கிய கிரகங்கள் உங்களுக்கு எதிராக ஒன்றன் பின் ஒன்றாக மாறுவதால், நீங்கள் உங்கள் சக்தியை இழக்க நேரிடும். ஒரு முறைக்கு இரண்டு முறை சிந்தித்து பின் எந்த முக்கிய முடிவுகளையும் எடுக்க வேண்டும். முதலீடுகள் செய்வதில் மற்றும் ஸ்பெகுலேடிவ் வர்த்தகம் போன்றவற்றில் ரிஸ்க் எடுப்பதை தவிர்ப்பது நல்லது. அது உங்கள் நிதி நிலையை குறிப்பாக ஆகஸ்ட் 2020 முதல் நவம்பர் 2020 பெரும் அளவு பாதித்து விடக்கூடும்.




Prev Topic

Next Topic