![]() | 2020 புத்தாண்டு (இரண்டாம் பாகம்) ராசி பலன்கள் Rasi Palangal - Thula Rasi (துலா ராசி) |
துலா ராசி | இரண்டாம் பாகம் |
மார்ச் 29, 2020 முதல் ஜூலை 01, 2020 வரை நல்ல நேரம் (70 / 100)
குரு மகர ராசிக்கு அதி சரமாய் மார்ச் 29, 2020அன்று பெயருகிறார், குரு உங்கள் ராசியின் 4ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்களுக்கு கொஞ்சம் அதிர்ஷ்டத்தை தருவார். குறிப்பாக உங்கள் நிதி நிலையில் நல்ல மாற்றம் ஏற்படும். நிதி நிலையில் வளர்ச்சி உண்டாகும். நீங்கள் கடந்த நாட்களில் உங்களுக்கு ஏற்பட்ட தடைகளில் இருந்து வெளி வருவீர்கள். சரியான மருந்தும், மருத்துவமும் கிடைப்பதால் உங்கள் உடல் நலத்தில் விரைவான முன்னேற்றம் ஏற்படும்.
குடும்பத்தில் இருக்கும் அரசியல் குறையும். சுப காரியங்கள் நிகழ்த்துவதில் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். உங்கள் குடும்பத்தினர்கள் உங்கள் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பீர்கள். காதலர்கள் நல்ல நேரத்தை காண்பார்கள. இந்த பாகத்தில் உங்கள் உத்தியோகத்தில் வளர்ச்சி உண்டாகும். உங்களுக்கு நல்ல சம்பள உயர்வு கிடைக்கும். மேலும் உங்கள் வேலை சுமையையும் எளிதாக சமாளிப்பீர்கள். தொழிலதிபர்கள் மேலும் நல்ல உதவி பெற உங்கள் பிறந்த சாதகத்தை பார்க்க வேண்டும்.
தற்போது உங்களுக்கு அர்தஷ்டம சனி நடைபெறுவதால், உங்கள் தொழிலில் உங்கள் மனைவி/கணவன் அல்லது உங்கள் குழந்தைகளின் பெயரை சேர்த்துக் கொள்வது நல்லது. அப்படி இல்லையென்றால், உங்கள் லாபத்தை பணமாக்கி, தொழிலில் செய்வதில் இருந்து வெளியேறுவது நல்லது. வீட்டு பராமரிப்பு போன்ற காரணங்களால் செலவுகள் அதிகரிக்கும். செலவு செய்யும் போது அதிக கவனம் தேவை. இல்லையென்றால், அது உங்கள் சேமிப்பை விரைவாக கரைத்து விடக் கூடும். இந்த பாகத்தில் யாரிடமும் பணம் கடன் வாங்குவதை தவிர்ப்பது நல்லது, பங்கு சந்தை முதலீடுகள் செய்ய வேண்டும் என்றாலும், அல்லது லாபம் பெற வேண்டும் என்றாலும், அதற்கு உங்கள் பிறந்த சாதகத்தின் பலன் இருக்க வேண்டும்.
Prev Topic
Next Topic