![]() | 2020 புத்தாண்டு (மூன்றாம் பாகம்) ராசி பலன்கள் Rasi Palangal - Thula Rasi (துலா ராசி) |
துலா ராசி | மூன்றாம் பாகம் |
ஜூலை 01, 2020 முதல் நவம்பர் 20, 2020 வரை அதிக இன்னல்கள் (35 / 100)
குரு பகவான் உங்கள் ராசியின் 3ஆம் வீட்டிற்கு மீண்டும் பெயருகிறார், இதனால் நீங்கள் மீண்டும் சோதனை காலத்தை சந்திக்க நேரிடும், குரு செப்டம்பர் 13, 2020 அன்று வக்கிர நிவர்த்தி அடைகிறார். விடயங்கள் இந்த பாகத்தில் நாட்கள் நகர நகர உங்கள் கட்டுபாட்டை மீறி நடக்கக் கூடும்.
உங்கள் மனைவி /கணவன் மற்றும் பெற்றோகளின் உடல் நலம் இந்த பாக காலகட்டத்தில் பாதிக்கக் கூடும். நீங்கள் சக்தி இழந்து காணப்படுவீர்கள். உங்கள் மருத்துவ செலவுகள் அதிகரிக்கும். உங்கள் மனைவி /கணவன் மற்றும் அவரது குடும்பத்தினர்கள் மற்றும் உங்கள் குழந்தைகளால் உங்களுக்கு பிரச்சணைகள் உண்டாகக் கூடும். குடும்பத்தில் சண்டைகள் அதிகரிப்பதால், உங்கள் மன நிம்மதி பாதிக்கக் கூடும். இந்த பாகத்தில் சுப காரியங்கள் நிகழ்த்த திட்டமிடுவது நல்ல யோசனையாக இருக்காது. காதலர்கள் கசப்பான அனுபவங்களை சந்திக்க நேரிடும்.
அலுவலகத்தில் அதிக அரசியல் நடைபெறுவதால், உங்கள் உத்தியோக வாழ்க்கை பாதிக்கக் கூடும். உங்களுடன் வேலை பார்ப்பவர்களுடன் நீங்கள் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டால், அது உங்கள் நற்பெயரை பாதித்து விடக் கூடும். உங்களுக்கு நல்ல சன்மானம், பதவி உயர்வு அல்லது உங்கள் நிறுவனத்தில் இருந்து வேறு எந்த விதமான பலனும் தற்போது கிடைக்காது. இது தொழிலதிபர்களுக்கு சோதனை நிறைந்த காலமாக இருக்கும். சுய தொழில் புரிவோர்கள் மற்றும் கமிசன் ஏஜெண்டுகள் எந்த பலனும் இல்லாமல் கடுமையாக உழைக்க நேரிடும்.
உங்கள் நிதி நிலை சுமாராகத்தான் இருக்கும். உங்களுக்கு புதிதாக கடன் சேருவதால், உங்கள் மன நிம்மதி பாதிக்கக் கூடும். இந்த பாகத்தில் பண விடயங்களில் நீங்கள் ஏமாற்றப் படுவீர்கள். ரியல் எஸ்டேட் சொத்துக்கள் குறித்த பிரச்சணைகள் வரக் கூடும். ரியல் எஸ்டேட் பரிவர்த்தனைகளை தவிர்ப்பது நல்லது,. பங்கு சந்தை முதலீடுகள் உங்களுக்கு அதிக பண இழப்பையும், நட்டத்தையும் ஏற்படுத்தக் கூடும்.
Prev Topic
Next Topic