![]() | 2020 புத்தாண்டு வர்த்தகம் மற்றும் முதலீடுகள் ராசி பலன்கள் Rasi Palangal - Thula Rasi (துலா ராசி) |
துலா ராசி | வர்த்தகம் மற்றும் முதலீடுகள் |
வர்த்தகம் மற்றும் முதலீடுகள்
நீங்கள் கடந்த 2019ஆம் ஆண்டு நல்ல அதிர்ஷ்டத்தை பெற்றிருப்பீர்கள். இந்த ஆண்டு உங்கள் அதிர்ஷ்டம் குறையக் கூடும். முக்கிய கிரகங்கள் உங்களுக்கு எதிராக சஞ்சரிப்பதால், நீங்கள் செய்யும் பங்கு சந்தை கணிப்புகள் தவறாகக் கூடும். இது குறிப்பாக நீங்கள் உளவியல் ரீதியாக உணர்ச்சிவசப்பட்டு முடிவுகள் எடுப்பதால் ஏற்படக் கூடும். உங்கள் மகா தசை பலவீனமாக இருந்தால், நீங்கள் பங்கு சந்தை வர்த்தகத்தை விட்டு முற்றிலுமாக விலகி இருப்பது நல்லது.
பங்கு சந்தையில் நீண்ட கால முதலீடுகள் செய்பவராக இருந்தால், நீங்கள் செய்யும் முதலீட்டில் பெரிய அளவில் நீங்கள் நட்டத்தை சந்திக்கக் கூடும். அரசு பத்திரம் அல்லது வங்கி சேமிப்பு கணக்கு அல்லது நிரந்தர வைப்புத் தொகை போன்றவற்றில் பாதுகாப்பாக முதலீடு செய்வது நல்லது. முடிந்த வரை ரிஸ்க் எடுக்காமல் இருப்பது நல்லது. முக்கிய கிரகங்கள் இணைந்து சஞ்சரிபப்தால், பெரிய அளவில் உங்களுக்கு பங்கு சந்தையில் நட்டம் ஏற்படக் கூடும்.
ரியல் எஸ்டேட் பரிவர்தங்களை பெப்ரவரி 2020 முதல் நவம்பர் 2020 வரையிலனா காலகட்டத்தில் தவிர்த்து விடுவது நல்லது. நீங்கள் உங்கள் வீட்டை அல்லது கட்டிடத்தை வாடகைக்கு விட்டிருந்தால், அதில் குடி இருப்பவர்களால் உங்களுக்கு பிரச்சணைகள் ஏற்படக் கூடும். மேலும் உங்கள் நிலத்தை வேறு நபர்கள் தவறாக பயன்படுத்தக் கூடும். புது கட்டிடம் கட்ட ஒப்புதல் வாங்கும் விடயங்களில் உங்களுக்கு சவால்கள் ஏற்படக் கூடும். மேலும் நீங்கள் வீடு கட்ட அணுகிய கட்டிட நிபுணர் உங்கள் பணத்தை எடுத்துக் கொண்டு, போலியான ஒப்பந்தம் போட்டு விட்டு, உங்களை ஏமாற்றி விட்டு ஓடி விடுவார். எந்த ஒரு முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டும் என்றாலும், அதற்கு முன் உங்கள் பிறந்த சாதகத்தின் பலனை பார்த்து செயல்படுவது நல்லது.
Prev Topic
Next Topic