![]() | 2020 புத்தாண்டு தொழில் மற்றும் இரண்டாம் வருமானம் ராசி பலன்கள் Rasi Palangal - Meena Rasi (மீன ராசி) |
மீன ராசி | தொழில் மற்றும் இரண்டாம் வருமானம் |
தொழில் மற்றும் இரண்டாம் வருமானம்
கடந்த அக்டோபர் 2019 வரை நல்ல அதிர்ஷ்டத்தை உங்கள் தொழிலில் கண்டிருப்பீர்கள். எனினும், நவம்பர் மற்றும் டிசம்பர் 2019 ஆகிய மாதங்களில் சில பின்னடைவுகளை நீங்கள் கண்டிருப்பீர்கள், இந்த ஆண்டு உங்களுக்கு நல்ல பலன்களோடு தொடங்கவில்லை என்றாலும், உங்களது இந்த சோதனை காலம் சில வாரங்களுக்கு மட்டுமே. பெப்ரவரி முதல் வாரத்தில் இருந்து நீங்கள் நல்ல வளர்ச்சியை காணத் தொடங்குவீர்கள்.
ஏப்ரல் 2020 முதல் உங்களுக்கு நல்ல பண வரத்து உண்டாகும். ஏப்ரல் 2020 வரை காத்திருந்து, அதன் பின்னர் வங்கி கடன் மற்றும் முதலீட்டாளர்கள் உதவியால் முதலீடுகளைப் பெற முயற்சிக்கலாம். குரு பகவான் சிறப்பான நிலையில் சஞ்சரிக்காததால், நீங்கள் உங்கள் தொழிலை குறைந்த விலைக்கு விற்று விட எண்ணுவீர்கள். அடுத்த ஒரு ஆண்டுவரை உங்கள் அதிர்ஷ்டம் அதிகரிக்கும் வரை உங்கள் தொழிலை தக்க வைத்துக் கொள்ள முயற்சி செய்யுங்கள்.
சுய தொழில் புரிவோர்கள், மற்றும் கமிசன் ஏஜெண்டுகள் கலவையான பலன்களை பெறுவார்கள், உங்களுக்கு ஏப்ரல் 2020 முதல் ஜூன் 2020 வரையிலான காலகட்டத்தில் எதிர்பாராத பண வரத்து உண்டாகும். நவம்பர் 2020 முதல் எந்த பின்னடைவுகளும் இல்லாமல் உங்களுக்கு விண்ணைத் தொடும் வளர்ச்சி உங்கள் தொழிலில் உண்டாகும் என்பதை நீங்கள் எதிர்பார்க்கலாம்.
Prev Topic
Next Topic