![]() | 2020 புத்தாண்டு குடும்பம் மற்றும் உறவுகள் ராசி பலன்கள் Rasi Palangal - Meena Rasi (மீன ராசி) |
மீன ராசி | குடும்பம் மற்றும் உறவுகள் |
குடும்பம் மற்றும் உறவுகள்
அக்டோபர் 2019 வரை நீங்கள் நல்ல பலன்களை உங்கள் சொந்த வாழ்க்கையில் கண்டிருப்பீர்கள். அதன் பின்னர் உங்களுக்கு சோதனை காலம் ஏற்பட்டிருக்கும். இந்த ஆண்டின் தொடக்கம் கூட உங்களுக்கு சிறப்பாக இல்லாமல் போகலாம். எனினும், பெப்ரவரி 11, 2020 முதல் நீங்கள் சோதனை காலத்தை விட்டு வெளி வந்து விடுவீர்கள்.
உங்கள் மனைவி /கணவன் மற்றும் அவரது உறவினர்கள் மற்றும் உங்கள் குழந்தைகளுடன் இருக்கும் உறவுகள் பெப்ரவரி 2020 முதல் சிறப்பாக இருக்கும். நீங்கள் உங்கள் மகன் அல்லது மகளுக்கு திருமணம் நிச்சயிக்க இது நலல் நேரம். ஏப்ரல் 2020 முதல் ஜூன் 2020 வரையிலான காலகட்டத்தில் சுப காரியங்கள் நிகழ்த்துவதில் நீங்கள் வெற்றி பெறுவீர்கள். இல்லையென்றால், அக்டோபர் / நவம்பர் 2020 வாக்கில் நீங்கள் திட்டமிடலாம். உங்கள் குழந்தைகள் உங்களுக்கு நல்ல செய்திகளை கொண்டு வருவார்கள்.
குரு உங்கள் ராசியின் 1௦ஆம் வீட்டில் சஞ்சரிபப்தால், நீங்கள் உங்கள் உறவுகள் குறித்த விடயங்களில் பயம் கொள்ளத் தேவை இல்லை. ராகு உங்கள் ராசியின் 3ஆம் வீட்டிற்கு செப்டம்பர் 2020 முதல் பெயர்ந்து உங்களுக்கு நல்ல சக்திகளையும், அத்ரிஷ்டத்தையும் உண்டாக்கித் தருவார். உங்கள் குடும்பத்தில் குழந்தை பிறப்பதால், அனைவருக்கும் மகிழ்ச்சி உண்டாகும். வெளிநாட்டிற்கு குறுகிய கால பயணம் செய்வதால் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.
Prev Topic
Next Topic