|  | 2020 புத்தாண்டு (முதல் பாகம்) ராசி பலன்கள் Rasi Palangal  -  Meena Rasi (மீன ராசி) | 
| மீன ராசி | முதல் பாகம் | 
ஜனவரி 01, 2020 முதல் மார்ச் 29, 2020 வரை நல்ல நேரத்தின் தொடக்கம் (65 / 100)
இந்த பாகத்தின் முதல் வாரம் உங்களுக்கு சவால் நிறைந்ததாக இருக்கக் கூடும். எனினும், சனி பகவான் உங்கள ராசியின் 11ஆம் வீடான லாப ஸ்தானத்திற்கு ஜனவரி 23, 2020 அன்று பெயருவதால் நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கலாம். உங்கள் குடும்பத்தில் சில கருத்து வேறுபாடுகளும், சண்டைகளும் இருந்தாலும், பெப்ரவரி 2020 முதல் அதனை சரி செய்ய உங்களுக்கு நல்ல நேரம் கிடைக்கும். 
இந்த காலகட்டத்தில் உங்கள் ஆரோக்கியத்தை மீண்டும் பெறுவீர்கள். உங்கள் மனைவி/கணவன் மற்றும் குழந்தைகள் உங்கள் நிலைமையை புரிந்து கொண்டு உங்களுக்கு உதவியாக இருப்பார்கள். சனி பகவான் நல்ல நிலையில் சஞ்சரிப்பதால், நீங்கள் சுப காரியங்கள் நிகழ்த்த திட்டமிடலாம். இந்த பாகத்தில் திருமணம் ஆனவர்கள் நல்ல மகிழ்ச்சியான உறவில் இருப்பார்கள். காதல் திருமணம் செய்து கொள்ள மேலும் சில மாதங்கள் காத்திருக்க வேண்டும். 
நீங்கள் புது வேலை வாய்ப்பிற்கு காத்திருந்தால், நல்ல சம்பளத்தோடு உங்களுக்கு ஒரு நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கும். எனினும், நீங்கள் விரும்பிய பதவி கிடைக்காமல் போகலாம். நீங்கள் அணுகும் நிறுவனம் பெரியதாகவும், நல்ல புகழ் பெற்றதாகவும் இருந்தால், அந்த வேலை வாய்ப்பை நீங்கள் ஏற்றுக் கொள்ளலாம். தொழிலதிபர்கள் நல்ல திட்டங்களை வகுக்க இது நல்ல நேரம். 
பெப்ரவரி மாதம் முதல் உங்கள் நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நீங்கள் விசா ஸ்டம்பிங் செய்ய வேண்டும் என்றால், அதற்கு உங்கள் பிறந்த சாதகத்தின் பலம் இருக்க வேண்டும். உங்கள் மகா தசை சாதகமாக இருந்தால் மட்டுமே, பங்கு சந்தை வர்த்தகத்தில் நீங்கள் லாபத்தை எதிர் பார்க்க முடியும். 
Prev Topic
Next Topic


















