![]() | 2020 புத்தாண்டு ராசி பலன்கள் Rasi Palangal - Meena Rasi (மீன ராசி) |
மீன ராசி | கண்ணோட்டம் |
கண்ணோட்டம்
கடந்த ஆண்டு அக்டோபர் 2019 வரை நல்ல பலன்களை பெற்றிருப்பீர்கள். நவம்பர் மற்றும் டிசம்பர் 2019 ஆகிய மாதங்களில் அதிக இன்னல்களை சந்தித்திருந்திருப்பீர்கள். தற்போது நீங்கள் சோதனை காலத்தை முடித்து விட்டதால், மகிழ்ச்சியாக இருக்கலாம். அடுத்த 3 ஆண்டுகளுக்கு சனி பகவான் உங்கள் ராசியின் 11ஆம் வீடான லாப ஸ்தானத்திற்கு பெயருவதால், நல்ல அதிர்ஷ்டம் உண்டாகும். நீங்கள் நீண்ட கால திட்டங்களை வகுக்கலாம். மேலும் இதனால் வரவிருக்கும் ஆண்டுகள் உங்களுக்கு நல்ல வெற்றியை பெற்றுத் தரும்.
மேலும் குரு மற்றும் சனி பகவான் இணைந்து அடுத்த 5 மாதங்களுக்கு சஞ்சரித்து உங்களுக்கு நல்ல அதிர்ஷ்டத்தை பல மடங்கு அதிகரிப்பார்கள். நீண்ட காலமாக உங்களுக்கு ஏற்பட்ட இன்னல்களில் இருந்து இந்த ஆண்டு முற்றிலுமாக வெளி வந்து விடுவீர்கள். உங்கள் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். சுப காரியங்கள் நடத்த இது நல்ல ஆண்டு. உங்கள் நிதி நிலையில் வளர்ச்சி ஏற்படுவதால் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.
ரியல் ஈஸ்டேட்டில் முதலீடுகள் செய்ய உங்களுக்கு சிறப்பான வாய்ப்புகள் கிடைக்கும். நீண்ட காலத்திற்கு உங்கள் உத்தியோகம் சிறப்பான நிலையில் இருக்கும். நீங்கள் புதிதாக தொழில் தொடங்க விரும்பினால், அதனை தொடங்க இந்த ஆண்டு முயற்சிகளை செய்யலாம். மேலும் ஏப்ரல், மே, ஜூன், ஜூலை, நவம்பர் மற்றும் டிசம்பர் ஆகிய மாதங்கள் உங்களுக்கு நல்ல அதிர்ஷ்டத்தை தரக்கூடிய மாதமாக இந்த ஆண்டில் இருக்கும்,.
Prev Topic
Next Topic