2020 புத்தாண்டு (இரண்டாம் பாகம்) ராசி பலன்கள் Rasi Palangal - Meena Rasi (மீன ராசி)

மார்ச் 29, 2020 முதல் ஜூலை 01, 2020 வரை சிறப்பான நேரம் (90 / 100)


இது உங்களுக்கு ஒரு சிறப்பான நேரமாக இருக்கும். சனி பகவான் மற்றும் குரு இணைந்து உங்களுக்கு நீச்ச பங்க ராஜ யோகத்தை இந்த பெயர்ச்சியில் உண்டாக்குவதால், இது உங்களுக்கு சாதகமான நேரமாக இருக்கும். இந்தபாகத்தில் உங்கள் வளர்ச்சியிலும், வெற்றியிலும் நல்ல வேகம் அதிகரிக்கும். உங்கள் உடல் உபாதைகள் குறையும். சரியான மருந்து மற்றும் மருத்துவ உதவி கிடைத்து விரைவில் குணமடைவீர்கள். உக்னால் மனைவி /கணவனுடன் இருக்கும் உறவில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். புது உறவை தொடங்க இது நல்ல நேரம். உங்கள் மகா தசை சாதகமாக இருந்தால், இந்த பாக காலகட்டத்தில் உங்களுக்கு திருமணம் நடக்கும். திருமணம் ஆன தம்பதியினர் குழந்தை பேரு பெரும் பாக்கியத்தை பெறுவார்கள்.
தற்போது இருக்கும் வேலையில் உங்களுக்கு மகிழ்ச்சி இல்லையென்றால், புது வேலை வாய்ப்பிற்கு முயற்சி செய்யலாம். உங்களுக்கு எந்த பெரிய முயற்சிகளும் தேவை இல்லாமல் எளிதாக அடுத்த நிலைக்கு பதவி உயர்வு கிடைக்கும். உங்கள் அலுவலக வேலைகளை எளிதாக சமாளிப்பீர்கள். உங்கள் எதிர்காலத்திற்காக பணத்தை சேமிப்பீர்கள். தொழிலதிபர்கள் இந்த பாகத்தில் சிறப்பாக செயல்படுவார்கள். நல்ல முன்னேற்றத்தையும் பெறுவார்கள். சுய தொழில் புரிவோர்கள் நல்ல புகழையும், நிதி சன்மானங்களையும் பெறுவார்கள்.


இந்த பாகத்தில் பயணம் உங்களுக்கு நல்ல பலனைத் தரும். விசா மற்றும் குடியேற்ற பலன்கள் பெறுவதில் உங்களுக்கு அதிர்ஷ்ட்டம் உண்டாகும். பங்கு சந்தை வர்த்தகம் உங்களுக்கு நல்ல அதிர்ஷ்டத்தை தரும். ஸ்பெகுலேடிவ் வர்த்தகம் உங்களுக்கு விண்ணைத் தொடும் அளவிற்கு லாபத்தை தரும். எனினும், அதற்கு உங்கள் பிறந்த சாதகத்தின் பலனும் இருக்க வேண்டும். ரியல் எஸ்டேட் சந்தையில் முதலீடு செய்ய இது நல்ல நேரம்.



Prev Topic

Next Topic