2020 புத்தாண்டு (மூன்றாம் பாகம்) ராசி பலன்கள் Rasi Palangal - Meena Rasi (மீன ராசி)

ஜூலை 01, 2020 முதல் நவம்பர் 20, 2020 வரை கலவையான பலன்கள் (50 / 100)


குரு பகவான் உங்கள் ராசியின் 1௦ஆம் வீட்டிற்கு மீண்டும் பெயருகிறார். கடந்த மாதங்களில் உங்களுக்கு கிடைத்த அதிர்ஷ்ட்டம் தற்போது முடிவுக்கு வருகின்றது. குரு செப்டம்பர் 13, 2020 அன்று வக்கிர கதி அடைகிறார். எனினும், சனி பகவான் நல்ல நிலையில் சஞ்சரிப்பதால், நீங்கள் பயப்படத் தேவை இல்லை. சில தாமதங்கள் ஏற்படக் கூடும். வேறு பெரிய பாதிப்புகள் இருக்காது.
உங்கள் உடல் நலம், குடும்பம் மற்றும் உறவுகள் குறித்த விடயங்களில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். எனினும், உங்கள் உத்தியோகம் மற்றும் நிதி வளர்ச்சி குறித்த விடயங்களில், அதிர்ஷ்ட்டம் குறைய்வாக இருக்கக் கூடும். உங்கள் உடல் நலம் சிறப்பாக இருக்கும். எனினும், நிதி பிரச்சனைகளால் அதிக மன உளைச்சல் ஏற்படக் கூடும். உங்கள் குடும்பத்தினர்கள் உங்கள் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பார்கள். எனினும், அவர்கள் தேவைகளை உங்களால் பூர்த்தி செய்ய முடியாமல் போகலாம். உங்கள் பிறந்த சாதகத்தின் பலம் இல்லாமல் சுப காரியங்கள் நிகழ்த்துவதை தவிர்ப்பது நல்லது.


காதல் விடயங்களில் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். எனினு, உங்கள் உத்தியோகம் மற்றும் நிதி நிலையின் மீது அதிகம் கவனம் செலுத்துவதால், காதல் சற்று குறைந்து காணப்படும். உங்கள் அலுவலக வேலை பாதிக்கப்படலாம். உங்கள் பதவிக்கு, அல்லது நீங்கள் தற்போது அலுவலகத்தில் பணி புரியும் நிலைக்கு எந்த மதிப்பும் இருக்காது/ எனினும், ராகு மற்றும் சனி பகவானின் பலத்தால் உங்கள் உத்தியோகம் பாதுகாப்பாக இருப்பதால் நீங்கள் மகிழ்ச்சி அடையலாம். அதிக அளவு அரசியல் உங்களுக்கு எதிராக நடப்பதால், உங்கள் பதவி தற்போது இருக்கும் நிலையில் இருந்து குறையலாம். நீங்கள் இந்த சூழலை எதிர்த்து போராட மற்றும் சாமர்த்தியமாக கையாள, ஒரு முறைக்கு இரண்டு முறை சிந்தித்த பின்னரே செயல்பட வேண்டும்.
உங்கள் சேமிப்பை பாதிக்கும் வகையில் செலவுகள் அதிகமாக இருக்கக் கூடும். நிதி நிலை குறித்த விடயங்களுக்கு தற்போது எந்த முடிவுகளும் எடுக்காமல் இருப்பது நல்லது. ரியல் எஸ்டேட் பரிவர்த்தனைகளை முற்றிலும் தவிர்த்து விடுவது. சொத்துக்கள் வாங்குவது மற்றும் விற்ப்பது போன்ற எந்த முயற்சிகளும் செய்யக் கூடாது/ அடுத்த ஆண்டு 2021ல் உங்களுக்கு ரியல் எஸ்டேட் சொத்துக்கள் குறித்த விடயங்களை பார்க்க போதிய நேரம் கிடைக்கும். மேலும் நீங்கள் உங்கள் வாழ்க்கையில் செட்டில் ஆகவும் நல்ல வாய்ப்பு கிடைக்கும். பங்கு சந்தை வர்த்தகம் உங்கள் மகா தசை சாதகமாக இருந்தால் மட்டுமே உங்களுக்கு லாபத்தை தரும்.



Prev Topic

Next Topic