![]() | 2020 புத்தாண்டு வர்த்தகம் மற்றும் முதலீடுகள் ராசி பலன்கள் Rasi Palangal - Meena Rasi (மீன ராசி) |
மீன ராசி | வர்த்தகம் மற்றும் முதலீடுகள் |
வர்த்தகம் மற்றும் முதலீடுகள்
பங்கு சந்தை வர்த்தகம் குறித்த விடயங்களுக்கு இந்த ஆண்டு உங்களுக்கு சற்று சூழ்ச்சி நிறைந்த ஆண்டாக இருக்கும். நீங்கள் பங்கு சந்தையில் ரோலர் கோஸ்டரில் பயணிப்பது போல உணருவீர்கள். உங்கள் மகா தசை பலவீனமாக இருந்தால், பங்கு சந்தை முதலீடுகளை தவிர்த்து விடுவது நல்லது. இல்லையென்றால், ஏப்ரல் 2020 முதல் ஜுன் 2020 வரையிலான காலகட்டத்தில் நீங்கள் 3 மாதங்களுக்கு நலல் அதிர்ஷ்ட்டத்தை பங்கு சந்தையில் காணலாம்.
உங்கள் மகா தசை சாதகமாக இருந்தால், பெப்ரவரி 2020 முதல் நீங்கள் நீண்ட கால முதலீடுகளை செய்ய முயற்சிக்கலாம். சனி பகவான் உங்கள் ராசியின் 11ஆம் வீட்டில் சஞ்சரித்து வரும் 2020, 2021, 2022 ஆகிய ஆண்டுகளில் உங்களுக்கு நல்ல அதிர்ஷ்ட்டத்தை தரக் கூடும். ரியல் எஸ்டேட் முதலீடுகள் செய்பவர்கள் நல்ல அதிர்ஷ்டத்தை பெறுவார்கள்.நீங்கள் இந்த ஆண்டு 2020ல் வாங்கும் சொத்துக்களின் மதிப்பு வரும் ஆண்டுகளில் பல மடங்கு உயரும். குரு உங்கள் அதிர்ஷ்டத்தை துடைத்து விடக் கூடும் என்பதால், சூதாட்டம் மற்றும் அதிர்ஷ்ட சீட்டு போன்றவற்றை தவிர்த்து விடுவது நல்லது.
Prev Topic
Next Topic