2020 புத்தாண்டு வேலை / உத்தியோகம் ராசி பலன்கள் Rasi Palangal - Meena Rasi (மீன ராசி)

வேலை / உத்தியோகம்


கடந்த 2019ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வரை உங்கள் உத்தியோகத்தில் பெரிய அளவு வெற்றியை கண்டிருப்பீர்கள். உங்கள் வளர்ச்சியையும், உங்களுக்கு கிடைத்த பதவி உயர்வையும் கண்டு பிறர் உங்கள் மீது பொறாமை பட்டிருக்கக் கூடும். சனி பகவான் நல்ல நிலையில் இந்த ஆண்டு சஞ்சரிக்கின்றார். எனினும், குரு உங்கள் ராசியின் 1௦ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்களுக்கு சில பிரச்சனைகளை உயர் நிலை அதிகாரிகள் மூலம் உண்டாக்கக் கூடும். உங்கள் உத்தியோகத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்பது உங்களுக்கு ஒரு நல்ல செய்தியாக இருக்கும். எனினும், நீங்கள் உங்களுக்கு கிடைக்கவிருக்கும் பதவி உயர்வை இழக்க நேரிடும், அல்லது உங்கள் அலுவலகத்தில் ஏற்படும் மாற்றங்களால் நல்ல ப்ரோஜெக்ட்டை இழக்க நேரிடும்.
எனினும், புது வேலை வாய்ப்பிற்கு தற்போது முயற்சி செய்ய வேண்டய தேவை இல்லை. விடயங்கள் விரைவாகவே உங்களுக்கு சாதகமாக மே 2020 அல்லது நவம்பர் 2020 வாக்கில் செட்டில் ஆகும். உங்கள் நேரம் நீண்ட கால அடிப்படையில் சிறப்பாக இருப்பதால், எந்த பயமும் உங்களுக்கு தேவை இல்லை. இந்த ஆண்டை நீங்கள் விரைவாக கடந்து விடுவீர்கள். எனினும், தற்போது இருக்கும் நிலையிலேயே பெரிதாக எந்த பிரச்சனையும் இல்லாமல் உங்களால் இருக்க முடியம். சனி பகவன் அடுத்த 3 ஆண்டுகளுக்கு மகர ராசியில் சஞ்சரித்து, உங்களுக்கு வரவிருக்கும் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு, 2021 மற்றும் 2022, நல்ல பலனைத் தருவார்.

Should you have any questions based on your natal chart, you can reach out KT Astrologer for consultation, email: ktastrologer@gmail.com

Prev Topic

Next Topic