2020 புத்தாண்டு தொழில் மற்றும் இரண்டாம் வருமானம் ராசி பலன்கள் Rasi Palangal - Dhanushu Rasi (தனுசு ராசி)

தொழில் மற்றும் இரண்டாம் வருமானம்


சனி பகவான் ஜென்ம ராசியில் சஞ்சரித்து கடந்த 2.5ஆண்டுகளாக உங்களுக்கு பல பிரச்சனைகளை தந்திருக்கக் கூடும். உங்கள் மறைமுக எதிரிகளால் உங்களுக்கு அதிக சதிகளும், உங்களுக்கு எதிரான அரசியலும் ஏற்பட்டிருக்கும். இந்த ஆண்டின் தொடக்கத்தில் உங்களுக்கு பெரிதாக எந்த நம்பிக்கை தரக்கூடிய விடயங்களும் நடக்காது. விடயங்கள் மிக மோசமாக உங்கள் தொழிலில் ஏற்படக் கூடும். நீங்கள் உங்கள் நற்பெயரை இழந்து, சட்ட பிரச்சனைகளையும், நவம்பர் 2020 வரை சந்திக்க நேரிடலாம்.
உங்கள் தொழில் சார்ந்த சொத்துக்களை விற்று உங்கள் கடனை சமாளிக்க முயற்சி செய்வீர்கள். உங்கள் வங்கி கடன்கள் நிராகரிக்கப்படலாம். உங்கள் போட்டியாளர்கள் உங்களது இந்த பலவீனமான சூழலை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு உங்கள் நிறுவனத்தை அவர்கள் எடுத்து நடத்த முயற்சி செய்யலாம். அடுத்த ஒரு ஆண்டு காலத்திற்கு உங்கள் பிறந்த சாதகத்தின் பலன் பலமாக இருக்க வேண்டும். இல்லையென்றால், உங்கள் வங்கி கணக்கு திவாலாகும் சூழல் உண்டாகலாம்.


உங்களுக்கு துரோகம் நடப்பதால் அதிக மனவருத்தப்படுவீர்கள். உங்கள் மன அழுத்தத்தின் அளவு மிக அதிகமாக இருக்கக் கூடும். இந்த காலகட்டத்தில் நீங்கள் கடவுள் வழிபாடு, சோதிடம் போன்றவற்றின் அருமைகளை உணருவீர்கள். உங்கள் தொழிலை எந்த காரணம் கொண்டும் விருவு படுத்தும் முயற்சியையோ அல்லது, புதிய முதலீடுகள் செய்வதையோ தவிர்த்து விடுவது நல்லது. மாறாக, சாதகமான கோச்சார கிரங்களின் நிலை இருக்கும்உங்கள் மனைவி /கணவன் அல்லது பெற்றோர்கள் அல்லது குழந்தைகளின் பெயரை தொழிலில் சேர்த்துக் கொண்டு, அவர்கள் பெயரில் ஒரு பங்கை எழுதி வைத்து, உங்கள் தொழிலை மேலும் நடத்த தொடரலாம். இதனால் உங்களால் பிரச்சனைகளை குறைக்க முடியும்.



Prev Topic

Next Topic