![]() | 2020 புத்தாண்டு குடும்பம் மற்றும் உறவுகள் ராசி பலன்கள் Rasi Palangal - Dhanushu Rasi (தனுசு ராசி) |
தனுசு ராசி | குடும்பம் மற்றும் உறவுகள் |
குடும்பம் மற்றும் உறவுகள்
முக்கிய கிரகங்கள் உங்கள் ஜென்ம ராசிக்கு பெயருவதால், நீங்கள் உங்கள் குடும்ப சூழலில் அதிக சவால்களை சந்திக்க நேரிடும். இந்த ஆண்டு ஜனவரி மாதம் மற்றும் செப்டம்பர் வாக்கில் அதிக பிரச்சனைகளை நீங்கள் சந்திக்க நேரிடும். விடயங்கள் உக்னால் கட்டுபாட்டை மீறி நடப்பதால், உங்கள் மன நிம்மதி பாதிக்கக் கூடும். உங்கள் மனைவி/கணவன், அவரது குடும்பத்தினர்கள் மற்றும் உங்கள் பெற்றோர்களுடன் உங்களுக்கு தேவையற்ற வாக்குவாதங்கள், கருத்து வேறுபாடுகள் அல்லது சண்டைகள் ஏற்படக் கூடும்.
உங்களுக்கு நெருக்கமானவர்கள் உங்களுக்கு அதிக பிரச்சனைகளை தரக் கூடும். உங்கள் குழந்தைகள் உங்கள் பேச்சை கேட்க மாட்டார்கள். மேலும் புதிதாக தேவைகளை முன் வைப்பார்கள். நீங்கள் உங்கள் குடும்பத்தினர்களுடன் அதிக நேரத்தை செலவிட்டு, அவர்களது தேவைகளையும், எதிர்பார்ப்புகளையும் புரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும். உங்கள் மகன் அல்லது மகளுக்கு திருமணம் நிச்சயிக்கவும், சுப காரியங்களை நிகழ்த்தவும் இது சரியான நேரம் இல்லை.
உங்கள் குடும்பத்தினர்களுடன் உங்களுக்கு விவாகரத்து, குழந்தை காவல் அல்லது சொத்து குறித்த பிரச்சனைகள் இருந்தால், அதில் விடயங்கள் உங்களுக்கு எதிராக செல்லக் கூடும். நீங்கள் வழக்கை இழக்க நேரிடும். இதனால் உங்களுக்கு மன உளைச்சலும், பண இழப்பும் அதிகமாகக் கூடும். நீங்கள் உங்களுக்கு வரவிருக்கும் இந்த மாற்றங்களை சந்திக்கவும், நவம்பர் மாதம் வரை இருக்கும் சோதனை காலத்தை கடக்கவும் உங்கள் மனதை தயார் செய்து கொள்ள வேண்டும். உங்களுக்கு ஏப்ரல் 2020 முதல் 3 மாதங்களுக்கு சற்று நிவாரணம் கிடைத்தாலும், அது குறுகிய காலத்திற்கு மட்டுமே.
Prev Topic
Next Topic