![]() | 2020 புத்தாண்டு (முதல் பாகம்) ராசி பலன்கள் Rasi Palangal - Dhanushu Rasi (தனுசு ராசி) |
தனுசு ராசி | முதல் பாகம் |
ஜனவரி 01, 2020 முதல் மார்ச் 29, 2020 வரை எதிர்பாராத பின்னடைவுகள் (30 / 100)
இந்த 2020ஆம் ஆண்டின் தொடக்கத்தில் எந்த முக்கிய கிரகங்களும் நல்ல நிலையில் இல்லை. நீங்கள் இந்த பாகத்தில் எது செய்தாலும், அது தவறாகவே சென்று முடியும். மேலும் இதன் பாதிப்புகளும் சுனாமி போல இருக்கும். அதிக உடல் உபாதைகள் ஏறபடக் கூடும். உங்கள் தூக்கம் பாதிக்கப் படும். உங்கள் பெற்றோகள், மனைவி /கணவன் உடல் நலம் பாதிக்கப்படும், என்பதால், அவர்களது உடல் நலத்தின் மீது கவனம் தேவை.
குடும்பத்தில் நடக்கும் பிரச்சனைகள் உங்கள் மன நிம்மதியை எடுத்து விடக் கூடும். புது உறவை தொடங்கவோ, அல்லது திருமணம் செய்து கொள்ளவோ இது நல்ல நேரம் இல்லை. நீங்கள் முன்பே சுப காரியங்கள் நிகழ்த்த திட்டமிட்டிருந்தால், அது தள்ளிப் போகக் கூடும். இந்த பாகத்தில் உங்கள் அலுவலகத்தில் நடக்கும் அரசியலாலும், உங்களுக்கு எதிராக சதியாலும், நீங்கள் உங்கள் உத்தியோகத்தை இழக்கும் சூழல் உண்டாகலாம். உங்கள் வருமானம் பாதிக்கக் கூடும். மேலும் அலுவலகத்தில் நீங்கள் அவமானப்படும் சூழல் உண்டாகலாம். தொழிலதிபர்களுக்கு எந்த நிவாரணமும் தற்போது கிடைப்பதற்கான அறிகுறி இல்லை.
நீங்கள் உங்கள் விசா அந்தஸ்த்தை இழந்து உங்கள் தாய் நாடு திரும்பும் சூழல் உண்டாகலாம். முடிந்த வரை பயணம் செய்வதை தவிர்ப்பது நல்லது, உங்கள் விசா மற்றும் குடியேற்ற பலன்கள் எந்த முன்னேற்றமும் இல்லாமல் தேக்கம் அடையக் கூடும். பண விடயங்களில் நீங்கள் ஏமாற்றப் படலாம். பங்கு சந்தை முதலீடுகளால் நீங்கள் பெரிய அளவு நட்டத்தை சந்திக்க நேரிடும். உங்கள் பிறந்த சாதக பலனை பார்த்து, அதற்கு ஏற்றவாறே எந்த முக்கிய முடிவுகளும் எடுக்க வேண்டும்.
Prev Topic
Next Topic