![]() | 2020 புத்தாண்டு (நான்காம் பாகம்) ராசி பலன்கள் Rasi Palangal - Dhanushu Rasi (தனுசு ராசி) |
தனுசு ராசி | நான்காம் பாகம் |
நவம்பர் 20, 2020 முதல் டிசம்பர் 31, 2020 வரை முன்னேற்றத்தின் தொடக்கம் –நல்ல நிவாரணம் (70 / 100)
இந்த பாகத்தை அடையும் போது, நீங்கள் உங்கள் சோதனை காலத்தை முடித்து இருப்பீர்கள். குரு உங்கள் ராசியின் 2ஆம் வீட்டிற்கு பெயர்ந்து சனி பகவானோடு இணைந்து சஞ்சரிப்பார். இதனால் நீச்ச பங்க ராஜ யோகம் உருவாகும். எனினும், உங்கள் வளர்ச்சி மற்றும் நிவாரணத்தின் வேகம் உங்கள் பிறந்த சாதக பலனை பொறுத்தே இருக்கும்.
இந்த பாகத்தை நீங்கள் அடைந்த உடன், கடந்த நாட்களில் உங்களுக்கு ஏற்பட்ட மோசமான சம்பவங்களை நீங்கள் ஜீரணிக்க முயர்சி செய்வீர்கள். உங்கள் உடல் உபாதைகளில் இருந்தும், மன உளைச்சலில் இருந்தும் வெளி வருவீர்கள். உங்கள் குடும்பத்தினர்களின் உடல் நலத்தில் முன்னேற்றம் ஏற்படும். உங்கள் குடும்பத்தில் இருக்கும் பிரச்சனைகள் குறையும். காதலர்கள் மன உளைச்சலில் இருந்து வெளி வருவார்கள். கடந்த நாட்களில் உங்களுக்குய் அவப்பெயர் ஏற்பட்டிருந்தால், தற்போது அதை சரி செய்யவும், உங்கள் மீது தவறு இல்லை என்பதை நிரூபிக்கவும், தேவையான முயற்சிகளை எடுக்க இது நல்ல நேரம்.
நீங்கள் வேலை தேடிக் கொண்டிருந்தாள், அது குறித்த நேர்காணல்களில் பங்கு பெற இது நல்ல நேரம். நீங்கள் கடந்த நாட்களில் உங்களுக்கு ஏற்பட்ட சங்கடங்களில் இருந்து வெளி வந்து, உங்கள் மனதில் நம்பிக்கையை வளர்த்து நேர்காணலுக்கு தயாராக முயற்சி செய்ய வேண்டும். அடுத்த ஓரிரு மாதங்களில் உங்களுக்கு நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கும். உங்கள் நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்படும். விசா மற்றும் குடியேற்றம் குறித்த விடயங்களில் முன்னேற்றம் ஏற்படும். மூச்சு பயிற்சி செய்து உங்கள் நேர்மறை சக்திகளை விரைவாக அதிகரித்துக் கொள்ளுங்கள்.
Prev Topic
Next Topic