2020 புத்தாண்டு உடல் நலம் ராசி பலன்கள் Rasi Palangal - Dhanushu Rasi (தனுசு ராசி)

உடல் நலம்


கேது, சனி பகவான் மற்றும் குரு இணைந்து உங்கள் ஜென்ம ராசியில் சஞ்சரித்து இந்த ஆண்டின் தொடக்கத்தில் உங்களுக்கு உடல் நல பிரச்சனைகளை தரக் கூடும். பிரச்சனைகளின் தாக்கம், வயிற்று வலி, மற்றும் பிற உடல் உபாதைகளால் அதிகமாக இருக்கக் கூடும். உங்கள் சக்தியின் அளவு விரைவாக குறைந்து, சிறிய வேலை செய்தாலும், விரைவாக சோர்வடைந்து விடக் கூடிய நிலை ஏற்படக் கூடும். உங்களுக்கு மயக்கம் ஏற்படக் கூடும். உங்கள் உணவில் போதுமான புரதம் மற்றும் நார் சத்து இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். இது நீங்கள் பலவீனமாகாமல் இருக்க உதவும்.
உங்கள் பெற்றோர்கள் மற்றும் மனைவி/கணவனின் உடல் நலம் பாதிக்கக் கூடும். மருத்துவ செலவுகள் அதிகரிக்கக் கூடும். நீங்கள் உங்கள் நண்பர்கள் வட்டாரத்தில் அதிக கவனத்தோடு இருக்க வேண்டும். உங்கள் மகா தசை பலவீனமாக இருந்தால், மது, புகை போன்ற தீய பழக்கங்களுக்கு நீங்கள் அடிமையாகக் கூடும். உங்கள் சொந்த விடயங்களை பிறரிடம், அது உங்கள் நண்பராக இருந்தாலும், பகிருவதை தவிர்ப்பது நல்லது. உங்கள் கட்டுப்பாட்டையும் மீறி நீங்கள் சூதாட்டத்தில் ஈடு படக் கூடும்.


அதிக தனிமையில் இருப்பதால் உங்களுக்கு பிரச்சனைகள் அதிகரிக்கக் கூடும். குறிப்பாக நீங்கள் வெளிநாட்டில் வசிப்பவராக இருந்தால் இந்த பிரச்சனை உண்டாகக் கூடும். தொலைதூர பயணத்தை முடிந்த வரை தவிர்த்து விடுவது நல்லது. ஒரு நல்ல ஆலோசகரை அணுகி, ஆலோசனை பெற்றுக் கொண்டு இந்த கடுமையான காலகட்டத்தை நீங்கள் கடக்க முயற்சி செய்ய வேண்டும். சுதர்சன மகா மந்திரம் மற்றும் ஹனுமான் சாலிச கேட்ட்பதால் சற்று ஆறுதலாக இருக்கும். மார்ச் 29, 2020 முதல் ஜூலை 1, 2020 வரை உங்களுக்கு குறிப்பிடத்தக்க நிவாரணம் கிடைக்கும்.


Prev Topic

Next Topic