![]() | 2020 புத்தாண்டு வழக்கு ராசி பலன்கள் Rasi Palangal - Dhanushu Rasi (தனுசு ராசி) |
தனுசு ராசி | வழக்கு |
வழக்கு
வழக்கு குறித்த விடயங்களில், உங்களுக்கு எதிரான சதியால் நிலுவையில் இருக்கும் வழக்குகள் உங்களுக்கு எதிராக செல்லக் கூடும். வழக்கால் நீங்கள் அதிக பணத்தை இழக்க நேரிடும். உங்கள் குடும்பத்தினர்களுடன் எந்த விதமான வழக்குகளிலும் ஈடுபடாமல் இருப்பது நல்லது. குழந்தை காவல், ஜீவனாம்சம் போன்ற வழக்குகளால் உங்களுக்கு அதிக வலி மிகுந்த சூழல் உண்டாகலாம். சட்ட விடயங்களில் இந்த ஆண்டு நவம்பர் 2020 வரை வெற்றியை எதிர் பார்க்க முடியாது.
உங்கள் பிறந்த சாதக பலன் இல்லாமல், உயர் நீதிமன்றத்திற்கு மேல் முறையீடு செய்ய செல்வது நலல் யோசனையாக இருக்காது. உங்களுக்கு வாய்ப்பு கிடைத்தால், நீதிமன்றம் செல்லாமலே உங்கள் பிரச்சனைகளை தீர்த்துக் கொள்ள முயற்சி செய்வது நல்லது. இல்லைஎன்றால், நீதிமன்ற வழக்குகளை நொவம்பர் 2020 வரை தள்ளிப்போடுவது நல்லது. அப்படி செய்ய முடியவில்லை என்றால், நீங்கள் உங்கள் பிறந்த சாதகத்தை பார்த்து இருக்கும் வாய்ப்புகளை தெரிந்து கொண்டு அதன் படி நடந்து கொள்வது நல்லது.
உங்கள் சொத்துக்கள் மற்றும் வாகனத்தை பாதுகாக்க போதிய காப்பீடு எடுத்துக் கொள்வது நல்லது. சுதர்சன மகா மந்திரம் அல்லது கந்தர் சஷ்டி கவசம் கேட்பதால் உங்கள் பிரச்சனைகளின் தாக்கம் குறையும்.
Prev Topic
Next Topic