![]() | 2020 புத்தாண்டு ராசி பலன்கள் Rasi Palangal - Dhanushu Rasi (தனுசு ராசி) |
தனுசு ராசி | கண்ணோட்டம் |
கண்ணோட்டம்
கடந்த 2019ஆம் ஆண்டு சனி பகவான் உங்கள் ஜென்ம ராசியில் சஞ்சரித்து, உங்கள் வாழ்க்கையில் பல விடயங்களில் அதிக பாதிப்புகளை உண்டாக்கி இருந்திருப்பார். குறிப்பாக செப்டம்பர் 2019 வாக்கில் அனைத்தும் உங்கள் கட்டுபாடின்றி சென்றிருக்கும். தற்போது இந்த 2020ஆம் ஆண்டில் முக்கிய கிரகங்கள் சில உங்கள் ஜென்ம ராசியில் சஞ்சரிக்க உள்ளன. இது உங்களுக்கு ஒரு நல்ல செய்தி இல்லை
அதிக இன்னல்கள், பிரச்சனைகள் மற்றும் ஏமாற்றங்கள் ஏற்படக் கூடும். உங்களுக்கு உங்கள் பிறந்த சாதக பலன் பலவீனமாக இருந்தால், உங்களுக்கு மன உளைச்சல் மற்றும் அவப்பெயர்கள் ஏற்படக் கூடும். மேலும் நீங்கள் தற்போது இருக்கும் பதவியில் இருந்து இறக்கப்படுவீர்கள், அல்லது உங்கள் உத்தியோகத்தை இழக்கும் சூழலும் உண்டாகலாம். செலவுகள் விண்ணைத்தொடும் அளவிருக்கு உயர்கம். பண விடயங்களில் நீங்கள் ஏமாற்றப் படுவீர்கள். சட்ட பிரச்சனைகள் உண்டாகக் கூடும்.
ஜென்ம சனியில் இருந்து நீங்கள் வெளி வந்தாலும், இன்னும், அடுத்த 2.5ஆண்டு காலம் ஏழரை சனியின் இறுதி பாகத்தை நீங்கள் கடக்க வேண்டியதிருகின்றது. உங்களுக்கு ஒரு நல்ல செய்தி என்னவென்றால், குரு மகர ராசியில் ஏப்ரல் 2020 முதல் மூன்று மாதங்களுக்கு அதி சரமாய் சஞ்சரிக்கின்றார். இந்த காலகட்டத்தை, அதாவது, ஏப்ரல் மாதம் முதல் ஜூன் மாதம் வரையிலனா காலகட்டத்தில் எந்த எந்த முக்கிய முடிவுகளையும் எடுக்கலாம். ஜூலை 2020 முதல் நவம்பர் 2020 வரை அதிக ஏமாற்றங்களும், அழுத்தமும் நிறைந்த காலகட்டமாக இருக்கும்.
Prev Topic
Next Topic