![]() | 2020 புத்தாண்டு (இரண்டாம் பாகம்) ராசி பலன்கள் Rasi Palangal - Dhanushu Rasi (தனுசு ராசி) |
தனுசு ராசி | இரண்டாம் பாகம் |
மார்ச் 29, 2020 முதல் ஜூலை 01, 2020 வரை குறிப்பிடத்தக்க நிவாரணம் / முன்னேற்றம் (75 / 100)
இந்த பாகத்தை நீங்கள் அடைந்ததும், உங்களுக்கு கடந்த நாட்களில் நடந்த மோசமான சம்பவங்களில் இருந்து சற்று மூச்சு விட இடம் கிடைக்கும். குரு மற்றும் சனி பகவான் உங்கள் ராசியின் 2ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்களுக்கு விடயங்களை இயல்பான சூழ்நிலைக்கு மாற்றுவார்கள். உங்கள் உடல் உபாதைகள் சரியான மருந்து கிடைப்பதாலும், ஓய்வு கிடைப்பதாலும் குறையும்.
உங்கள் குடும்பத்தில் இருக்கும் பிரச்சனைகள் குறையும். நீங்கள் உங்கள் குடும்பத்தினரை விட்டு பிரிந்து இருந்தால், அவர்களுடன் மீண்டும் சேர நீங்கள் முயற்சி செய்ய இது நல்ல நேரம். உங்கள் மகன் மற்றும் மகளுக்கு திருமணம் நிச்சயிக்க இது நல்ல நேரம். எனினும், நீங்கள் ஜூன் 30, 2020க்கு சுப காரியங்களை நிகழ்த்திட திட்டமிட வேண்டும். இல்லையென்றால், அது உங்கள் கட்டுபாடின்றி தள்ளிப்போகக் கூடும்.
அலுவலகத்தில் இருக்கும் உங்கள் வேலை சுமையும், அரசியலும் குறையும். உங்களுக்கு உங்கள் முதலாளியிடம் இருந்து நல்ல உதவி கிடைக்கும். உங்கள் வேலை பற்றியும் அதனால் உங்களுக்கு ஏற்படும் முனேற்றம் பற்றியும் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். எனினும், சம்பள உயர்வு மற்றும் பதவி உயர்வைப் பெற இன்னும் காத்திருக்க வேண்டும்/ நீங்கள் உங்கள் வேலையை இழந்திருந்தால், உங்களுக்கு இந்த பாகத்தில் நல்ல வேலை வாய்ப்பு கிடைக்க வாய்ப்பு உள்ளது. தொழிலதிபர்கள் நல்ல திருப்புமுனையை காண்பார்கள். மேலும் உங்களுக்கு புது ப்ரோஜெக்ட்டுகள் கிடைக்கும்.
உங்கள் இதி நிலையில் முன்னேற்றம் ஏற்படும். பல வழிகளில் இருந்தும் உங்களுக்கு பண வரத்து உண்டாகும். உங்கள் கடனை நிதி மறுபரிசீலனை செய்து, உங்கள் கடன் சுமையை குறைத்துக் கொள்ள இது நல்ல நேரம். எனினும், பங்கு சந்தை வர்த்தகத்தில் இருந்து அதிர்ஷ்டத்தை எதிர் பார்க்க இன்னும் சில நாட்கள் காத்திருக்க வேண்டும். எனினும், நீண்ட கால முதலீடு செய்தவர்கள், இந்த பாகத்தில் சற்று நல்ல முன்னேற்றத்தை காண்பார்கள்.
Prev Topic
Next Topic