2020 புத்தாண்டு வேலை / உத்திய்கோம் ராசி பலன்கள் Rasi Palangal - Dhanushu Rasi (தனுசு ராசி)

வேலை / உத்திய்கோம்


கடந்த சில ஆண்டுகள் ஜென்ம சனியால் நீங்கள் அதிகம் அவதிப்பட்டிருப்பீர்கள். எதிர்பாராவிதமாக, உங்களுக்கு இந்த ஆண்டும் உத்தியோகத்தில் எதிர்பார்த்த வளர்ச்சி கிடைக்காமல் போகக் கூடும். குரு மற்றும் கேது இணைந்து உங்கள் ஜென்ம ராசியில் சஞ்சரித்து இந்த ஆண்டு உங்களுக்கு அதிக பிரச்சனைகளை உண்டாக்கக் கூடும்.
உங்கள் மேலாளர் உங்களுக்கு பிரச்சனையை உண்டாகக் கூடும். உங்கள் செயல்திறன் குறைவால் உங்களுக்கு எச் ஆரிடம் இருந்து நோட்டிஸ் வரக் கூடும். பெப்ரவரி 2020 அல்லது செப்டம்பர் 2020 வாக்கில் உங்கள் அலுவலகத்தில் நடக்கும் அரசியல் மற்றும் சதிகளால், குறிப்பாக மேல் நிலை அதிகாரிகளால் ஏற்படும் இத்தகைய பிரச்சனைகளால், நீங்கள் உங்கள் வேலையை இழக்கும் சூழல் உண்டாகலாம். நீங்கள் உங்கள் விசா அந்தஸ்த்தை இழந்து தாய் நாடு திரும்பும் சூழலும் ஏற்படக் கூடும்.


இந்த ஆண்டு உங்கள் பொறுமையை சோதிக்கும் வகையில் இந்த சோதனை காலம் இருக்கும். அலுவலகத்தில் நடக்கும் பிரச்சனைகளை ஜீரணிக்க முடியாமலும், அதனால் ஏற்படும் அவமானங்களாலும், நீங்கள் தானாகவே உங்கள் வேலையை ராஜினாமா செய்து விடக் கூடும். அலுவலாகத்திலும், சமூக வாழ்க்கையிலும் பெண்களிடம் மிகக் கவனமாக இருக்க வேண்டும்,. நீங்கள் பெண்ணாக இருந்தால், உங்களுக்கு மேலாளர் அல்லது உயர் பதவியில் இருப்பவர்களால் பிரச்சனைகள் ஏற்படக் கூடும்.
இந்த ஆண்டின் இரண்டாம் பகுதில், அலுவலகத்தில் இருக்கும் யாரிடமும் மனதளவில் நெருக்கமாக பழகுவதை தவிர்த்து விடுவது நல்லது. ஏனென்றால், அது உங்கள் உத்யோகதிற்கே பெரும் பாதிப்பை தங்கு விடக் கூடும். ஏப்ரல் 2020 முதல் 3 மாதங்களுக்கு உங்களுக்கு தற்காலிகமாக சில நிவாரணம் கிடைக்கும்.




Prev Topic

Next Topic