2020 புத்தாண்டு தொழில் மற்றும் இரண்டாம் வருமானம் ராசி பலன்கள் Rasi Palangal - Vrishchik Rasi (விருச்சிக ராசி)

தொழில் மற்றும் இரண்டாம் வருமானம்


தொழிலதிபர்கள் கடந்த 2019ஆம் ஆண்டு கடுமையான காலகட்டத்தை சந்தித்திருந்திருபார்கள். உங்கள் நண்பர்களும், உங்கள் எதிரிகளும் உங்களுக்கு எதிராக துரோகம், மற்றும் சதி செய்ததால் உங்கள் மன நிம்மதி பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கும். நீங்கள் கடந்த ஆண்டு அதிக பணத்தை இழந்திருப்பீர்கள். தற்போது விடயங்கள் உங்களுக்கு சாதகமாக நல்ல திருப்பத்தை பெரும்.
உங்கள் மறைமுக எதிரிகள் தங்கள் பலத்தை இழப்பார்கள். நீங்கள் உங்கள் போட்டியாளர்களுக்கு எதிராக சிறப்பாக செயல்படுவீர்கள். உங்களது புதுமையான யோசனைகளும், திட்டங்களும் இந்த ஆண்டு 2020 பெரிய ஆளவு வெற்றியைப் பெரும். உங்களுக்கு ஜனவரி / பெப்ரவரி 2020 வாக்கில் வங்கிக் கடன் மூலமாகவும், புது முதலீட்டாளர்கள் மூலமாகவும், போதிய நிதி உதவி கிடைக்கும். உங்கள் தொழிலை விரிவுபடுத்த, புது வேலையாட்கள் எடுக்க மற்றும் உங்கள் தொழிலை பல இடங்களில் தொடங்க இது நல்ல நேரம்.


உங்கள் வளார்ச்சியை யாராலும் தடுக்க முடியாது. நீங்கள் இந்த ஆண்டு எதை செய்தாலும், அதில் பெரிய அளவு வெற்றியைப் பெறுவீர்கள். சுய தொழில் புரிவோரோகள், ரியல் எஸ்டேட் ஏஜெண்டுகள், கமிசன் ஏஜெண்டுகள் மற்றும் இன்சூரன்ஸ் எஜெண்டுகள் சிறப்பான பலன்களை இந்த ஆண்டு பெறுவார்கள். தப்ரோது நீங்கள் உத்தியோகத்தில் இருக்குறீர்கள், ஆனால் புதிதாக பகுதி நேரமாகவோ அல்லது முழு நேரமாகவோ தொழில் தொடங்க வேண்டும் என்று நினைத்தால், அதற்கான முயற்சிகளை எடுக்க இது நல்ல நேரம்.



Prev Topic

Next Topic