![]() | 2020 புத்தாண்டு நிதி / பணம் ராசி பலன்கள் Rasi Palangal - Vrishchik Rasi (விருச்சிக ராசி) |
விருச்சிக ராசி | நிதி / பணம் |
நிதி / பணம்
கடந்த ஆண்டு 2019ல் உங்கள் நிதி நிலை மிகவும் மோசமாக பதித்திருந்திருக்கும். பண விடயங்களில் உங்கள் நண்பர்கள், குடும்பத்தினர்கள் அல்லது உறவினர்கள் உங்களை ஏமாற்றி இருந்தால், அதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை. நீங்கள் உங்கள் சொத்துக்களை கடனை அடைக்க மிகக் குறைந்த விலைக்கு விற்றிருப்பீர்கள். 2019ல் சுனாமி போன்ற ஒரு நிலையை நீங்கள் உங்கள் நிதி நிலையில் சந்தித்திருந்தாலும், இந்த ஆண்டு 2020ல் உங்களுக்கு நல்ல அதிர்ஷ்டம் உண்டாக உள்ளது.
இந்த ஆண்டில் உங்கள் நிதி நிலையில் பெரும் அளவு முன்னேற்றம் ஏற்படும். குரு உங்கள் ராசியின் 2ஆம் வீட்டிலும், சனி பகவான் 3ஆம் வீட்டிலும் சஞ்சரித்து உங்கள் நிதி நிலையில் பெரும் அளவு முன்னேற்றத்தை ஏற்படுத்துவார்கள். உங்கள் கடனை நிதி மறுபரிசீலனை செய்யவும், கண்டன் சுமையை குறைக்கவும் இது சிறப்பான நேரம். உங்கள் கடன் பிரச்சனைகளில் இருந்து நீங்கள் வெளி வந்து விடுவீர்கள். உங்கள் கிரெடிட் மதிப்பு அதிகரிக்கும். பண வரத்து வெளிநாடுகளில் இருந்தும் உண்டாகும். உங்கள் வங்கிக் கடன் மற்றும் கிரெடிட் கார்டு குறைந்த வட்டி விகிதத்திற்கு ஒப்புதல் பெரும்.
உங்கள் முந்தைய நிறுவனத்தில் இருந்தோ, இன்சூரன்ஸ் அல்லது வழக்கில் தீர்ப்பு கிடைப்பதாலோ ஒரு பெரிய தொகை உங்களுக்கு செட்டில்மென்ட்டாக கிடைக்கும். உங்கள் கனவு வீட்டிற்கு நீங்கள் குடி பெயருவீர்கள். ஆகஸ்ட் 2020 முதல் அக்டோபர் 2020 வரையிலான காலகாட்டத்தில் நீங்கள் உங்கள் அதிர்ஷ்டத்தை முயற்சி செய்து பார்க்கலாம். புது வாகனம் வாங்கி உங்கள் சௌகரியத்தை அதிகரித்துக் கொள்ள இது நல்ல நேரம். மொத்தத்தில் இந்த 2020ஆம் ஆண்டு உங்கள் நிதி நிலை வளர்ச்சி குறித்த விடயங்களுக்கு சிறப்பான ஆண்டாக இருக்கும்.
Prev Topic
Next Topic