![]() | 2020 புத்தாண்டு (முதல் பாகம்) ராசி பலன்கள் Rasi Palangal - Vrishchik Rasi (விருச்சிக ராசி) |
விருச்சிக ராசி | முதல் பாகம் |
ஜனவரி 01, 2020 முதல் மார்ச் 29, 2020 வரை சிறப்பான நேரம் (85 / 100)
இந்த புது ஆண்டு 2020 உங்கள் வாழ்க்கையில் ஒரு புது தொடக்கத்தை கொடுக்கும். இந்த முதல் பாகம் உங்களுக்கு, குரு மற்றும் சனி பகவான் நல்ல நிலையில் சஞ்சரிபப்தால், சிறப்பாக இருக்கும். நீங்கள் இந்த பாகத்தில் நீண்ட கால திட்டங்களை போடலாம். எனினும், உங்களுக்கு கிடைக்கும் நிவாரணம் மற்றும் வளர்ச்சியின் வேகம் உங்கள் பிறந்த சாதகத்தை பொறுத்தே இருக்கும். எனினும், கோச்சார கிரகங்கள் உங்களுக்கு இந்த காலகட்டத்தில் நல்ல உதவியாக இருப்பார்கள்.
உடல் நல பிரச்சனைகளில் இருந்து முற்றிலும் வெளி வந்து விடுவீர்கள். உங்கள் சொந்த வாழ்க்கையில் இருக்கும் பிரச்சனைகள் மற்றும் உறவுகளுடன் இருக்கும் பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வை பெறுவீர்கள். உங்கள் மகன் மற்றும் மகளுக்கு திருமணம் நிச்சயிக்க இது நல்ல நேரம். திருமணம் ஆன தம்பதியினியர் நல்ல மகிழ்ச்சியான வாழ்க்கையில் பெறுவார்கள். மேலும் நல்ல அன்யுனியதோடு இருப்பார்கள. நீண்ட காலமாக குழந்தை பேருக்காக காத்திருந்த தம்பதியினர் தற்போது அதற்க்கான பாக்கியத்தை பெறுவார்கள். உங்கள் நண்பர்கள், குடும்பத்தினர்கள் மற்றும் உறவினர்கள் உங்களுக்கு நல்ல உறுதுணையாக இருப்பார்கள்.
நீங்கள் புது வேலைக்கு முயர்சி செய்து கொண்டிருந்தாள், உங்களுக்கு ஒரு பெரிய நிறுவனத்தில் இருந்து அதற்கான வாய்ப்பு கிடைக்கும். நல்ல முன்னேற்றம் தரக்கூடிய ப்ரோஜெக்ட்டில் வேலை பார்க்க உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். உங்கள் முதலாளி மற்றும் உடன் வேலை பார்ப்பவர்கள் உங்களுக்கு நல்ல உறுதுணையாக இருப்பார்கள். தொழிலதிபர்களுக்கு இது ஒரு பொற்காலம் என்று கூறலாம். உங்கள் நிதி தேவைகளை சமாளிக்க உங்களுக்கு போதிய பண வரத்து உண்டாகும்.
பயணம் உங்களுக்கு நல்ல அதிர்ஷ்டத்தை தரும். வெளிநாட்டிற்கு பயணம் செய்ய உங்களுக்கு விசா கிடைக்கும். உங்கள் குடியேற்ற பலன்களும் ஒப்புதல் பெரும். இந்த பாகத்தில், உங்கள் நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உங்கள் கடனை நிதி மறுபரிசீலனை செய்து, உங்கள் மாதாந்திர தவணைகளை குறைத்துக் கொள்ள இது நல்ல நேரம். நீங்கள் பங்கு சந்தை முதலீடுகள் செய்யலாம். எனினும் ஜனவரி 27, 2020 வரை ஸ்பெகுலேடிவ் வர்த்தகம் செய்வதை தவிர்ப்பது நல்லது.
Prev Topic
Next Topic